அம்மாவின் ஆணைக்கிணங்க உள்ளாட்சித் தேர்தல்
இந்த தேர்தலில் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில் ஆண்கள் 2 கோடியே 88 லட்சம் பேர். பெண் கள் 2 கோடியே 92 லட்சம் பேர். இதர வாக்காளர்கள் 4,584 பேர். உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 91,098 வாக்குச் சாவடிகளில் நடைபெறவுள்ளது. இதில் 62,337 வாக்குச்சாவடிகள் ஊரகப்பகுதியிலும், 28,761 வாக்குச் சாவடிகள் நகர்ப்புறங்களிலும் அமைக்கப்படும். சென்னை மாநக ராட்சியில் மட்டும் 5,531 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வெள்ளை நிறத்திலும், ஊராட்சித் தலைவருக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன...