செவ்வாய், 27 செப்டம்பர், 2011

வெறுத்துப்போன தா,தா,தா.பாண்டியன்.


                                          
ள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க,ஆரம்பித்துவைத்த தனித்துப்போட்டி அ.தி.மு.கவையும் தொற்றிக்கொண்டது.கூட்டணி கட்சிகளைக் கழற்றிவிட தனித்துப்போட்டி என கூறாமல் கூட்டணிகளுக்கு மிச்சம் வைக்காமல் அனைத்துத் தொகுதிகளையும் தனது வேட்பாளர்களை நிறுத்தி ஆக்கிரமித்துக்கொண்டது.
ஆனால் அது கதவை மூடிய பின்னும் மார்க்சிஸ்ட்,தா.பாண்டியன் கட்சியினர்{ இந்தியகம்யூனிஸ்ட் கட்சி என்று கூப்பிட இயலாதவாறு பாண்டியன்.அ.தி.மு.க,வின் துதிபாடி கட்சியாக்கிவிட்டார்.} தோட்டத்தின் கதவின் முன் தினம் முன்னிலையாகி அழைப்பை எதிநோக்கி நின்றனர்.ஆனால் எச்சிலைகள் வெளியே வந்து விழுந்தனவே தவிர அழைப்பு வரவே இல்லை.பேருக்கு சில அம்மா கட்சியினர் நலம் விசாரித்துவிட்டு சென்று விட்டனர்.
மார்க்சிஸ்டுகளுக்கு கொஞ்சம் சுயமரியாதை இருந்ததால் தனியே சில இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து மோதி பார்க்கத்துணிந்து விட்டனர்.
ஆனால் தா.பாண்டியனோ அவர்கள் அவ்வாறு செய்வது அம்மாவை கோபப்படுத்திவிடும் இன்னும் கொஞ்சம் கெஞ்சிப்பார்க்கலாம் என்று தன் சார்பாக பழனிச்சாமியை தோட்டத்திற்கு அனுப்பி வைத்தார். பழனிச்சாமியின் செருப்புதான் தேய்ந்ததே ஒழிய தோட்டத்தின் கதவுகள் அடைக்கப்பட்டது அடைக்கப்பட்டதுதான். சட்டமன்றத்தேர்தலில் தோற்று முழிக்கும் தி.மு.க.வே தனியாக நிற்கும் போது அறுதி பெரும்பான்மை பெற்ற தனது கட்சிக்கு தொங்கு சதைக்கட்சிகள் தேவையா?என்பதே அ.தி.மு.க.தலைவியின் எண்ணம்.
இவர்களைப்போலவே இன்னொரு கழற்றிவிடப்பட்ட கட்சி தே.மு.தி.க, தனியே முழித்துக்கொண்டிருக்கும்  போது மார்க்சிஸ்டுகள் அவர்களை சந்தித்து தன்னம்பிக்கையை ஊட்டி சின்னதாகக்கூட்டணி அமைத்து தொகுதிகளை பங்கும் வைத்துவிட்டது.
தா.பாண்டியனோ எல்லாக்கட்சிகளும் போய் விட்டன.அம்மா நம்மீது இறக்கப்பட்டு சில இடங்களைக் கண்டிப்பாகத்தருவார்.வென்று காட்டுவோம்.என்ற அவாவில் இன்றுவரை தோட்டத்தை க்காவல் காத்ததில் வாட்ச்மேனுக்கு பேச்சுத்துணைக்கு ஆள்கிடைத்ததே ஒழிய தா.பா.கனவு பலிக்கவில்லை.
   இப்போது தா.பாண்டியன் கட்சி “அம்மாவுடன் நடத்திய பேச்சு வார்த்தை முறிந்து விட்டது.கூட்டணியும் இல்லை.தனியே போட்டி யிடுகிறோம்.வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்”
   -என்று அறிவித்துள்ளார்.
கொஞ்சம் முன்பு இந்த முடிவுக்கு வந்திருந்தால் மார்க்சிஸ்ட்-நடிகர் விஜய்காந்த் கட்சி கூட்டணியில் வத்தலோ,தொத்தலோ சில இடங்களைப் பெற்று கொஞ்சம் மரியாதையை மார்க்சிஸ்ட் மாதிரி காப்பாற்றியிருக்கலாம்.
இவர்கள் ஜெயலலிதா குணம் தெரிந்தே கூட்டணி வைத்த்வர்கள்.பின் அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்தானே ஆக வேண்டும்.
உலக அரசியலையே கரைத்து ஞானம் கண்டது போல் கட்டுரைகளை ஜனசக்தியில் எழுது தா.பாண்டியன் கடைசியில் உள்ளூர் அரசியல் அம்மாவிடம் செல்லுபடியாக வில்லையே?
கருணாநிதி போட்டால் வரி.அம்மா வரி போட்டால் நிதி ஆதாரம் தேடுவது.இதுதானே தா.பா.வின் அரசியல் கோட்பாடு.
எவ்வளவுதான் அம்மா புகழ்ப் பரணியை சட்டமன்றத்தில் இடதுசாரிகள் பாடிய போதும்.கடந்த ஆட்சியின் அலங்கோலங்களைப்பட்டியல் போட்டு அம்மாவின் மனதைக் குளிர வைத்தும் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடம் கூட வாங்கமுடிய வில்லையே?தா.பாண்டியன் தா,தா,என்று எவ்வளவுதான் கேட்டும் பலன் இல்லையே?
 சரி.நாள் முடிவதற்குள் போய் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யப் பாருங்கள்.போங்க ,போய் முதல்ல பிள்ளைகளைப் படிக்க வைக்கப்பாருங்கப்பா?
                               
_______________________________________________________________________________    
வளரும் வறுமைக்கோடு^ 
இந்தியா விடுதலை பெற்றபோது வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தவர்களின் எண்ணிக்கை, 32 கோடியாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை, 40 கோடியாக உயர்ந்துள்ளது.
நம்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 70 சதவீதம் என, பொருளாதார நிபுணர் அர்ஜுன் சென்குப்தாவும், 50 சதவீதம் பேர் என, என்.சி.சக்சேனாவும், 37.5 சதவீதம் என, பொருளாதார வல்லுனர் சுரேஷ் டெண்டுல்கரும் தெரிவித்துள்ளனர்.
நகர் புறங்களில் மாதம் 965 ரூபாய் வருவாய் ஈட்டுபவர்கள் மற்றும் கிராம புறங்களில் மாதம் 781 ரூபாய் வருவாய் ஈட்டுபவர்களை ஏழைகளாக கருதக்கூடாது. அவர்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்’ என, சமீபத்தில்உச்ச நீதிமன்றத்தில் திட்ட க்குழு தெரிவித்திருந்தது.
 தேசிய ஆலோசனை க்குழுஉறுப்பினராகவும், திட்டஆணையத்தின் செயலராகவும் உள்ள என்.சி.சக்சேனா, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சக்சேனா கூறியதாவது: ஒரு மாதத்துக்கு 965 ரூபாய் வருவாய் என்றால், ஒரு நாளைய வருவாய் 32 ரூபாய் என்ற கணக்கு வருகிறது. இந்த 32 ரூபாயை வைத்து ஒரு குடும்பம் நடத்த முடியுமா? இந்த வருவாய் உள்ளவர்களை ஏழையாக கருதக்கூடாது எனஉச்ச நீதிமன்றத்தில் திட்டஆணையம் கேட்கிறது.
இந்த பிரச்னை திட்டஆணையக்கூட்டத்தில் புயலை கிளப்பியது.நம்நாடு சுதந்திரமடைந்த போது 32 கோடி பேர், வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை, 40 கோடியாக உயர்ந்துள்ளது. 72-73ம் ஆண்டு காலத்தில், ஒரு நாளைக்கு ஒன்றரை ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழைகளாக கருதப்பட்டனர்.
தற்போது, ஒரு நாளைக்கு 32 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழை எனப்படுகின்றனர். ஏன் ஏழைகள் அதிகரித்துள்ளனர் என்பதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, ரேஷன் அட்டை கொடுக்கப்பட்டு மானிய விலையில் உணவு தானியங்கள் கொடுக்கப்படுகின்றன.
இந்த குடும்பஅட்டையை வைத்திருப்பவர்களில் 60 சதவீதம் பேர், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள். இதில், பரிதாபம் என்னவென்றால் உண்மையிலேயே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 20 சதவீதம் பேருக்கு குடும்ப அட்டையே கிடையாது. பொது பங்கீட்டு முறையில் நிறைய குளறுபடிகள் உள்ளன.
வறுமையில் உள்ளவர்கள் குறித்து கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஏராளமான பழங்குடியினரும், ஏழைகளும் விடுபட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு அளிக்கும் நலத் திட்ட உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை.இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
நம்மைவிட பின்தங்கிய நிலையில் உள்ள வியட்நாம், மியான்மர்[பர்மா], பூடான் நாடுகளில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஆனால், நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை குறையவில்லை.
ஏழைகளின் மேம்பாட்டுக்கு ஆண்டு தோறும், 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டும் பலனில்லை.வறுமையில் உள்ளவர்கள் குறித்து கணக்கெடுப்பின் போது மக்கள் தவறான தகவல்களை தெரிவிப்பதால், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குறித்த சரியான விவரம் கிடைப்பதில்லை.
எனவே, புதிய அணுகுமுறையை பின்பற்றும்படி கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிடம் தெரிவித்துள்ளேன். ஏழைகள் குறித்த சரியான கணக்கெடுப்பின் மூலம் தான் நலத் திட்ட உதவிகள் உரியமுறையில் சென்றடைய முடியும்.இவ்வாறு சக்சேனா கூறினார்
 __________________________________________________________________________________________
240 டன்கள்    வெள்ளி
_கடலில் 70 வருடங்களுக்கு முன்பு மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் 240 டன்கள் வெள்ளி இருப்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த 1940ஆம் ஆண்டு டிசம்பரில் எஸ்.எஸ்.கெய்ர்சப்பா என்ற இங்கிலாந்து கப்பல் இந்தியாவிலிருந்து புறப்பட்டு இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு சென்றது. கப்பலில் 240 டன்கள் வெள்ளி, இரும்பு மற்றும் தேயிலை ஆகியவை ஏற்றப்பட்டிருந்தன.
கப்பல் 1941, பிப்ரவரி 17ல் அயர்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதிக்கு 300 மைல் தொலைவில் வந்த பொழுது பருவநிலை மற்றும் எரிபொருள் இல்லாமை ஆகியவற்றால் தத்தளித்து கொண்டிருந்தது. அது 2ஆம் உலக போர் நடைபெற்று கொண்டிருந்த சமயம். அதனை நடுக்கடலில் வைத்து ஜெர்மனி நாட்டின் நீர்மூழ்கி கப்பலான யு101 தாக்கி மூழ்கடித்தது.
இதில் ஒருவரை தவிர கப்பலில் இருந்த 85 பேர் கொல்லப்பட்டனர். தற்போது இந்த கப்பல் அட்லாண்டிக் கடற்படுகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் 155 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான வெள்ளி இருப்பது தெரிய வந்துள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------