இடுகைகள்

மூளை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தூங்கும் போதும் தூங்காத மூளை.

படம்
”மனிதர்கள் தூங்கும்போதும் அவர்களின் மூளை தொடர்ந்து விழிப்புடன் இயங்குகிறது என்று தெரிவித்திருக்கும் விஞ்ஞானிகள், வார்த்தைகளின் பொருள் புரிந்து அதற்கேற்ற செயல்களை செய்விக்கும் அளவுக்கு மனித மூளை, மனிதர்கள் தூங்கும்போதும் விழிப்புடன் செயல்படுகிறது ” என்று நிரூபித்திருக்கிறார்கள். கேம்பிரிட்ஜ் மற்றும் பாரிஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் பங்கேற்பாளர்கள் விழித்திருக்கும்போது ஒரு வார்த்தைக்கட்டளையை பிறப்பித்து, அந்த கட்டளையை ஏற்று அந்த பங்கேற்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும்படி பணிக்கப்பட்டார்கள்.  இந்த சோதனையின்போது இந்த பங்கேற்பாளர்கள் விழித்திருக்கும்போது செய்யப்பழகிய செயல்களை தூங்கும்போதும் அதே மாதிரி கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் தொடர்ந்து செய்தார்கள். இதன் முடிவில் மனிதர்கள் தூங்கும்போதும், அவர்களின் மூளை சிக்கலான அதேசமயம் தன்னிச்சையாக செய்யக்கூடிய செயல்களை செய்யும் என்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த ஆய்வின் முடிவுகள் கரெண்ட் பயாலஜி என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் சில சொற்கள் பேச...