வன்கொடுமைகள்
வன்கொடுமைகள் 2024ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் தேதி. உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் நகரில் ஒரு தலித் பெண் கூட்டு வல்லுறவு செய்யப்பட்டார். அவரது தந்தை காவல்துறையை அணுகி இருக்கிறார். முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய காவல்துறை மறுத்துள்ளது. மன அழுத்தம் தாங்காமல் அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தானிலுள்ள சுற்றுலா தலத்தில் படப்படிப்பு செய்து கொண்டிருந்த ஒரு தலித் இளைஞர் தாக்கப்பட்டுள்ளார். அவரை முட்டி போட வைத்து, அவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் ஒரு தலித் பஞ்சாயத்து தலைவர் மரத்தில் கட்டி வைத்து, ஊரை விட்டு விரட்டப்பட்டார். கடந்த 2023ஆம் ஆண்டு, தலித்கள் மீதான வன்கொடுமை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அரசு, 2018ஆம் ஆண்டு தொடங்கி நான்கு வருடங்களில் 1.9 லட்சம் வன்கொடுமை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக தகவல் அளித்தது. தேசிய ஆவண குற்ற நிறுவனத் தரவுகளின்படி இச்சம்பவங்களில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 49,613 வன்கொடுமைகள் தலித்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளனர். தலித்கள் மீதான வன்முறைகளில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெள...