வன்கொடுமைகள்


suran

வன்கொடுமைகள் 

2024ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் தேதி. உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் நகரில் ஒரு தலித் பெண் கூட்டு வல்லுறவு செய்யப்பட்டார். அவரது தந்தை காவல்துறையை அணுகி இருக்கிறார். முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய காவல்துறை மறுத்துள்ளது. மன அழுத்தம் தாங்காமல் அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ராஜஸ்தானிலுள்ள சுற்றுலா தலத்தில் படப்படிப்பு செய்து கொண்டிருந்த ஒரு தலித் இளைஞர் தாக்கப்பட்டுள்ளார். அவரை முட்டி போட வைத்து, அவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் ஒரு தலித் பஞ்சாயத்து தலைவர் மரத்தில் கட்டி வைத்து, ஊரை விட்டு விரட்டப்பட்டார்.

கடந்த 2023ஆம் ஆண்டு, தலித்கள் மீதான வன்கொடுமை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அரசு, 2018ஆம் ஆண்டு தொடங்கி நான்கு வருடங்களில் 1.9 லட்சம் வன்கொடுமை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக தகவல் அளித்தது. தேசிய ஆவண குற்ற நிறுவனத் தரவுகளின்படி இச்சம்பவங்களில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 49,613 வன்கொடுமைகள் தலித்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளனர்.

பாஜகவின் ஆட்சியில் அதிகரிக்கும் வன்கொடுமைகள்!

தலித்கள் மீதான வன்முறைகளில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி 2023ம் ஆண்டு வரையிலான தரவுகளில் 12,287 பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள் உத்தரப்பிரதேசம், தலித்களுக்கு எதிரான வன்கொடுமை எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசம் உள்ளது.

சாதியினர் மீது 52,866 வன்முறை சம்பவங்கள் பட்டியல் பழங்குடியினரின் மீது 9,725 சம்பவங்களும் 2022ஆம் ஆண்டு பதிவாகி இருப்பதாக ஒன்றிய அமைச்சகம் தெரிவிக்கிறது. இவற்றில் பெருமளவுக்கான சம்பவங்கள், அதாவது 97.7% சம்பவங்கள், வெறும் 13 மாநிலங்களில் பதிவாகி உள்ளன. அவற்றில் முன்னணி வகிப்பது பாஜக ஆளும் மாநில உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகியவை குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசத்தில் 2021ஆம் ஆண்டு 13146 ஆக இருந்த குற்றச் சம்பவங்கள் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 15368 ஆக உயர்ந்துள்ளது. 16% அதிகம்.

இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறை எடுத்த நடவடிக்கை இன்று சுவாரஸ்யம்!

சாதியினர் மீதான வன்கொடுமை சம்பவங்கள் 69,597 ஆக பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை சம்பவங்கள் 12,417 ஆக மொத்தம் பதிவான இந்நிலையில், 49,852 சம்பவங்களில்தான் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 2022ஆம் ஆண்டின் இறுதியில் 17,166 பட்டியல் சாதியினர் மீதான குற்றச்சம்பவ வழக்குகளும் 2,702 பட்டியல் பழங்குடியினர் மீதான குற்றச்சம்பவம் வழக்குகளும் காவல்துறையால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பாஜகவின் ஆட்சியில் அதிகரிக்கும் வன்கொடுமைகள்!

மற்றொரு முக்கியமான பிரச்சினை வன்கொடுமை வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றங்கள் எண்ணிக்கையில் பற்றாக்குறை!

வன்கொடுமை குற்றங்களை விசாரிக்க, மாநில அரசுகளே சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முடியுமென வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழிவகை செய்துள்ளது. வேகமாக வழக்குகளை விசாரிக்க ஏதுவான சாத்தியத்தை இது கொடுத்தாலும் நாட்டின் 498 மாவட்டங்களில் வெறும் 194 சிறப்பு நீதிமன்றங்கள்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், 17 என்ற அதிகமான எண்ணிக்கையில் சிறப்பு நீதிமன்றங்களை தமிழ்நாடு கொண்டுள்ளது. சாதி மற்றும் பழங்குடி மீதான குற்றங்கள் பட்டியலில் 10 மீட்டர் இடத்தில் தமிழ் நாடு உள்ளது.

இரு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்தும் தலித்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க முடியாத உத்தரபிரதேச பாஜக அரசு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக தலித்களுக்கு ஆதரவு அளிப்பது போலவும் தலித்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவது போலவும் காட்டிக் கொள்ளும் பாஜக, உண்மையில் தலித்களுக்கு எதிரான அரசியலை இலக்காக கொண்டு வருவதையே பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமாக வரும் தலித் வன்கொடுமைகளின் எண்ணிக்கை காட்டுகிறது.


 உட்கட்சி விவகாரம்

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது சம்பந்தமான மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த தடையை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று (பிப்.7) மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, புதிய தலைமையை தேர்வு செய்தது உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை. உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளன.

தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்துள்ள எவரும், கட்சியில் உறுப்பினராக இல்லை. இவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். கட்சியில் எந்த பிளவும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்த ஆதரவு அப்படியே நீடிக்கிறது அதில் எந்த மாற்றமும் இல்லை.' எனவும் குறிப்பிட்டார்.

suranமேலும், 'பொதுக்குழு உறுப்பினர்களும், 65 சட்டமன்ற உறுப்பினர்களில் 61 உறுப்பினர்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்க உள்ள இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தலையிட்டு சின்னத்தை முடக்கினால் அது கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்.' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


'கட்சி தனக்கு சொந்தமானது என யாரும் உரிமை கூறாத நிலையில் உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்பதால் தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்ய வேண்டும்.' என வலியுறுத்தினார்.

தேர்தல் ஆணையம் தரப்பில், 'உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் விளக்கத்தைக் கேட்கும் வகையில் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.' என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் வாதத்தை பதிவு செய்து கொண்டு மட்டுமே உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்றனர். மேலும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக அளித்த மனு மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியுமா?' என்றும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும் என்றும், தற்போது இந்த மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா, இல்லையா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை.' என விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து ரவீந்திரநாத், புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'பன்னீர்செல்வம் கட்சியின் பெயர், கொடி பயன்படுத்த தடை விதித்திருந்தாலும், தற்போது நிலைமை மாறி உள்ளது. பெரும்பாலான உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர். அதனால், இது சம்பந்தமாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது.' என குறிப்பிட்டனர்.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுக்கள் மீதான உத்தரவை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?