குரோம் பிரவுசர் பற்றி...,
தினந்தோறும் குறைந்த பட்சம் சில ஆயிரம் பேராவது, தங்களின் வழக்கமான பிரவுசரை விட்டுவிட்டு, குரோம் பிரவுசருக்கு மாறி வருவது இப்போது வழக்கமாகிவிட்டது. இதற்குக் காரணம், இதன் பாதுகாப்பான தன்மை, எளிதான இடைமுகம், கூடுதல் வசதிகள், நம் விருப்பத்திற்கு வளைக்க வசதி எனப் பலவற்றைக் கூறலாம். கீழே அதனைப் பயன்படுத்துவதில் சில குறிப்புகள் தரப்படுகின்றன. 1. பிரவுசரில் திறந்து வைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச்செல்ல,கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது. முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4...) உள்ளது எனப் பார்க்கவும். பின்னர், கண்ட்ரோல் கீ அழுத்தி, அதன் இடத்திற்கான எண்ணை (Ctrl+3) அழுத்தினால், அந்த குறிப்பிட்ட டேப் உள்ள தளம் திரையில் கிடைக்கும். 2. ஸ்பேஸ் பாரினை அழுத்தினால், எந்த இணைய தளத்திலும், தளமானது ஒரு பக்கம் கீழாகச் செல்லும் என்பதனை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே போல, ஷிப்ட் கீ அழுத்தி ஸ்பேஸ் பார் அழுத்தினால், அதே போல பக்கங்களைத் தாண்டிச் செல்லலாம். 3. குரோம் அதன் எக்ஸ்டன்ஷன்களுக்குச் செல்ல ஷார்ட் கட் கீ வழிகளை அமைக்க...