ஆண்ட்ராயிட் காலம்







கூகுளின் ஆண்ட்ராயிட் இயக்குதளமானது  2012 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பிரலமான கையடக்கத்தொலைபேசிகளின் இயக்குதளமாக விளங்குமென கார்ட்னர் ஆராய்ச்சி நிறுவனம்  கூறியுள்ளது.
2012ல் சந்தையில் 49% கையடக்கத்தொலைபேசிகள் ஆண்ட்ராயிட் இயக்குதளத்தினை கொண்டவையாக இருக்குமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வருடத்தில் ‘ஸ்மாட்போன்’ விற்பனை எண்ணிக்கையானது 468 மில்லியன்களாக இருக்குமெனவும் இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 57.7 வீத அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ஆப்பிள் இயக்குதளமானது 2 ஆவது மிகப்பெரிய இயக்குதளமாக இருக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நோக்கியாவுடன் இணைந்துள்ளதால் மைக்ரோசாப்டின் விண்டோசானது 3 ஆவது மிகப்பெரிய இயங்குதளமாக இருக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?