மீண்டும் கூடா நட்பு ஆகுமா?
"திமுக 40 சீட் தராவிட்டால் காங். தனித்து போட்டி. "என்று ஆனந்த மாளிகை இளவரசர் ராகுல்காந்தி கோபத்துடன் கூறியுள்ளார். சரியான நேரங்களில் மிகச்சரியாக தவறான முடிவுகளை எடுப்பதில் ராகுல்காந்தி சமர்த்தர். பீகார் நிலையை வைத்து தமிழ் நாட்டில் முடிவுகளை ராகுல் எடுக்கக் கூடாது. சோனியா 25 க்கு அதிகமா கொஞ்சம் கேளுங்கள் என்று சொல்லிய நிலையில் ஏற்கனவே திமுக,கருணாநிதி மீது ஒவ்வாமை தாக்கத்தில் உள்ள ராகுல் நடைமுறையை கணக்கில் கொண்டு கணக்குகளை போட வேண்டும் . 2011இல் 2ஜி வழக்கில் கருணாநிதி குடுமபத்தையே திகாரில் குடி வைக்கப் போவதாக மிரட்டி 63 தொகுதிகளைவாங்க்கினார்கள் காங்கிரசார். ஆனால் மின் தடை ,2ஜியில் சுழலில் அவர்களும் மாட்டி வென்றது 5 மட்டுமே. அதுவும் திமுகவுக்கு வெற்றி நிச்சயம் என்ற தொகுதிகள் அவை. அதே போல்தான் 63களில் பெரும்பான்மை திமுக வெற்றி பெறக்கூடியத் தொகுதிகள்.அங்கு நின்றால் காங்கிரசு கண்டிப்பாக வெல்லும் என்ற நம்பிக்கையில் பிடிவாதமாக பெற்றுக்குக் கொண்டு வெல்ல முடியாமல் போனவை அவை.திமுக நின்றிருந்தால் கண்டிப்பாக வெல்லும் வாய்ப்பை திட்டமிட்டு தட்டிப்பறித்தது க...