மீண்டும் கூடா நட்பு ஆகுமா?
"திமுக 40 சீட் தராவிட்டால்
காங். தனித்து போட்டி. "என்று ஆனந்த மாளிகை இளவரசர் ராகுல்காந்தி கோபத்துடன் கூறியுள்ளார்.
சரியான நேரங்களில் மிகச்சரியாக தவறான முடிவுகளை எடுப்பதில் ராகுல்காந்தி சமர்த்தர்.
பீகார் நிலையை வைத்து தமிழ் நாட்டில் முடிவுகளை ராகுல் எடுக்கக் கூடாது.
சோனியா 25 க்கு அதிகமா கொஞ்சம் கேளுங்கள் என்று சொல்லிய நிலையில் ஏற்கனவே திமுக,கருணாநிதி மீது ஒவ்வாமை தாக்கத்தில் உள்ள ராகுல் நடைமுறையை கணக்கில் கொண்டு கணக்குகளை போட வேண்டும் .
2011இல் 2ஜி வழக்கில் கருணாநிதி குடுமபத்தையே திகாரில் குடி வைக்கப் போவதாக மிரட்டி 63 தொகுதிகளைவாங்க்கினார்கள் காங்கிரசார்.
ஆனால் மின் தடை ,2ஜியில் சுழலில் அவர்களும் மாட்டி வென்றது 5 மட்டுமே.
அதுவும் திமுகவுக்கு வெற்றி நிச்சயம் என்ற தொகுதிகள் அவை.
அதே போல்தான் 63களில் பெரும்பான்மை திமுக வெற்றி பெறக்கூடியத் தொகுதிகள்.அங்கு நின்றால் காங்கிரசு கண்டிப்பாக வெல்லும் என்ற நம்பிக்கையில் பிடிவாதமாக பெற்றுக்குக் கொண்டு வெல்ல முடியாமல் போனவை அவை.திமுக நின்றிருந்தால் கண்டிப்பாக வெல்லும் வாய்ப்பை திட்டமிட்டு தட்டிப்பறித்தது காங்கிரசு.
அதிமுகவுக்கு அடுத்து பெரும்பான்மையான 23 % வாக்குகள் பெற்ற திமுக பெற்ற தொகுதிகள் 23.ஆனால் 7.4% வாக்குகள் மட்டுமே பெற்ற விஜயகாந்த் கட்சி பெற்ற இடம் 29.என்ற வேடிக்கையும் இத்தேர்தலில் நடந்தது.
அப்போது திமுக காங்கிரசுக்கு 63 இடங்களைக்கொடுத்து விட்டு,தோழமைக்கட்சிகளுக்கு எல்லாம் பங்கிட்டு கொடுத்து விட்டு மிகக் குறைவான தொகுதிகளை போட்டியிட்டதே எதிர்கட்சி வாய்ப்பு கூட தட்டிப்போன காரணம்.
அதற்கு முக்கிய காரணம் இந்த கூடா நட்பு காங்கிரசுதான்.
வாக்கு சதவிகிதமும் அதிக இடங்களில் போட்டியிட்ட அதிமுக 32% என்றும் மிகக் குறைவாக போட்டியிட்ட திமுக 23% பெற்றன.
ஆனால் திமுக வாக்கு வங்கி அப்படியேத்தான் உள்ளது.
அதிமுகவைப் போன்றே திமுகவும் சமமான எண்ணிகையில் போட்டியிட்டால் 30% கிடைத்திருக்கும்.
அன்றைய அறிமுக கட்டாய மின் வெட்டு நேரம் தான் தமிழக மக்களை அதிமுகவை மாற்றாக எண்ண வைத்து நடுநிலையாளர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்க வைத்தது.
2ஜி ,அன்றைய ஈழப்படுகொலைகள் சற்றுதான் பாதித்தது.
இன்றைய நிலையில் 2ஜி முறைகேடு பற்றி பொது மக்களுக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது,ஈழப்பிரச்னை தேர்தல் நேரம் மட்டுமே சில ஈழ வியாபாரிகளால் எழுப்பப்படுகிறது.அதை எழுப்பியவர்களின் சாயம் கரைந்து விட்டது.
சொத்து குவிப்பு ஊழல் வழக்கு ஜெயலலிதாவின் மற்றொரு கோர முகத்தைக் காட்டியதுடன் அவர் வளர்ப்பு மகன் திருமணம்,,டான்சி நிலம்,சிப்காட் ,கொடைக்கானல் ஓட்டல் போன்ற ஊழல்களில் இருந்து இன்னமும் திருந்த வில்லைஎன்பதை காட்டிக்கொடுத்து விட்டது.
ஸ்டாலினின் நமக்கு நாமே தமிழக மக்களிடம் தாக்கத்தை கண்டிப்பாக உண்டாக்கியுள்ளது.அதற்கு சாட்சி அப்பயணத்தின் போது மக்கள் ஸ்டாலினிடம் கொடுத்த 4.5 லட்ச குறை தீர்ப்பு மனுக்கள்.
காங்கிரசு இன்றைய தனது நிலையை கொஞ்சம் உணர வேண்டும் .
தேமுதிக போன்ற கட்சிகள் வருகையினால் காங்கிரசு வளர்ச்சி முற்றிலுமாக நின்று போய்விட்டது.
வாசன் 2011 தேர்தலில் காங்கிரசுக்கு கொஞ்சமாவது உழைத்த தொண்டர்கள் பலரை அழைத்துக்கொண்டு போய் தந்தையாரின் த.மா.கா வை மீண்டும் துவக்கி விட்டார்.
காங்கிரசு மிரட்டியே வாங்கிய 63 தொகுதிகள் காலத்துக்கு முற்றிலும் எதிரான காலம் இந்த 2016 தேர்தல் களம்.
ஏற்கனவே பாஜக தணித்து 234 தொகுதிகளிலும் போட்டி என்று களத்தில் நிற்கையில் காங்கிரசும் அப்படியே தனித்து போட்டி என்று முடிவெடுத்துப் போட்டியிட்டால் நிச்சயம் அது அதிகமான தொகுதிகளில் டெபாசிட் இழந்த கட்சி எது என்பதற்கான போட்டியாகத்தான் இருக்கும்.
காங்கிரசு,பாஜக கட்சிகளின் தனித்துப்போட்டி முடிவினால் பலனடையப்போவது தேர்தல் ஆணையம்தான்.
எந்த தேர்தலிலும் இல்லாத அளவு திருப்பி கொடுக்காத காப்புத்தொகை வருமானம் 2016 தமிழ் நாடு சட்டமன்றத்தேர்தலில் அதற்கு கிடைக்கும்.
இன்று.
மார்ச்-31.
- மால்ட்டா விடுதலை தினம்(1979)
- ஈபிள் டவர் தொடக்க விழா கொண்டாடப்பட்டது(1889)
- முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது(2007)
- ஆஸ்திரேலிய விமானப்படை அமைக்கப்பட்டது(1921)
========================================================================================