இடுகைகள்

சிதைந்து பிம்பம் ஒன்றிய லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிதைந்து வரும் பிம்பம்

படம்
  தமிழ்நாட்டில் கோனோ கார்பஸ் மரங்களை இனி வளர்க்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் சார்பில் கடந்த வாரம் உத்தரவிடப்பட்டது. பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களைக் கருத்தில்கொண்டு, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக, அந்த உத்தரவில் துறையின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் அந்நியத் தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு கொள்கையின்படியும், தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பரிந்துரையின்படியும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோனோ கார்பஸ் என்பது அமெரிக்காவில் கடற்கரைப் பகுதிகளில் குறிப்பாக சதுப்பு நிலப்பகுதிகளில் வளரும் ஒரு வித அலங்கார மரமாகும். மிக வேகமாகவும், அடர்த்தியாகவும் வளரும் இந்த மரம், இந்த காரணங்களுக்காகவே பல்வேறு நாடுகளிலும் வளர்க்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இந்த மரங்கள் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகங்களால் வளர்க்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் நகரை அழகுபடுத்தும் முயற்சியாக, பூங்காக்கள் மற்றும் சாலை...