சிதைந்து வரும் பிம்பம்

 தமிழ்நாட்டில் கோனோ கார்பஸ் மரங்களை இனி வளர்க்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் சார்பில் கடந்த வாரம் உத்தரவிடப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களைக் கருத்தில்கொண்டு, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக, அந்த உத்தரவில் துறையின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் அந்நியத் தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு கொள்கையின்படியும், தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பரிந்துரையின்படியும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோனோ கார்பஸ் என்பது அமெரிக்காவில் கடற்கரைப் பகுதிகளில் குறிப்பாக சதுப்பு நிலப்பகுதிகளில் வளரும் ஒரு வித அலங்கார மரமாகும்.

மிக வேகமாகவும், அடர்த்தியாகவும் வளரும் இந்த மரம், இந்த காரணங்களுக்காகவே பல்வேறு நாடுகளிலும் வளர்க்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இந்த மரங்கள் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகங்களால் வளர்க்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் நகரை அழகுபடுத்தும் முயற்சியாக, பூங்காக்கள் மற்றும் சாலைகளில் இவை வளர்க்கப்பட்டன..

எ ந்த வகை மண்ணாக இருந்தாலும் இந்த மரங்கள் வேகமாக வளரும். சீருடை அணி வகுப்பைப் போன்று, ஒரே மாதிரியாக கூம்பு வடிவில் நன்கு அடர்த்தியாக வளரும் இந்த மரங்கள், பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும்.

நன்கு நிழல் தருவதால் சாலையோரங்கள், பூங்காக்களில் மட்டுமின்றி, தொழில் நிறுவன வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவன வளாகங்களில் இவற்றை வளர்ப்பதை பலரும் பெரிதும் விரும்புகிறார்கள்.

இந்தியாவைப் போலவே, பாகிஸ்தான், இரான், சீனா, மத்திய கிழக்கு நாடுகளில் இவை அதிகம் வளர்க்கப்பட்டன.

இந்த மரங்கள் மனிதர்களுக்கு ஆஸ்துமா, சுவாசப் பிரச்னை, ஜலதோஷம், ஒவ்வாமை மற்றும் தோல் நோய்களை உருவாக்குகின்றன என்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மரங்கள் பூக்கள் பூக்கும் காலங்களில் அவற்றிலிருந்து வெளியாகும் மகரந்தத் துாள்தான், மனிதர்களுக்குப் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கராச்சி பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையின் கீழ் சுற்றுச்சூழலில் 32 வகையான தாவரங்களுடன் கோனோ கார்பஸின் தாக்கம், குறிப்பாக 'காற்றின் தரம்' குறித்து ஏரோபயாலஜிஸ்டுகள் ஆராய்ச்சி நடத்தினர். கராச்சியில் ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், அதற்கு இந்த மரங்கள்தான் காரணம் என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.

மேலும், கட்டடங்களின் அடித்தளத்துக்கும் இம்மரங்கள் ஆபத்தை விளைவிப்பதாகவும் சாலையோரங்களில் உள்ள இந்த மரங்களின் வேர்கள், குழாய்களைச் சுற்றிக்கொள்வதால் அகற்றுவதும் மிகவும் கடினமான காரியம் என்றும் அவர் கூறினார்.

இந்த மரங்களிலிருந்து பரவும் மாவுப்பூச்சிகள் (Mealybug) பிற தாவரங்களுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமென்றும் உறுதி ஆனது .

பாகிஸ்தான், இரான் ஆகிய நாடுகள் இந்த மரங்களைத் தடை செய்துள்ளன. அரபு நாடுகளும் இவற்றை இனி வளர்ப்பதில்லை என்று தீர்மானித்துள்ளன. இந்தியாவில் குஜராத், ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இவை தடை செய்யப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பரில் இந்த மரங்களைத் தடை செய்தது  ஆந்திரா அரசு,.

இதுவரை பலவிதமான மண் வகைகள் மற்றும் வெவ்வேறு தட்பவெப்ப நிலைகளில் செழித்து வளரும் கோனோகார்பஸ், நகர்ப்புற வளர்ச்சிக்கு ஏற்ற அலங்கார மரமாக உள்ளது. வேகமான வளர்ச்சி மற்றும் பசுமையான இலைகளுக்கு பெயர் பெற்ற கோனோகார்பஸ், சாலையோரங்கள், சாலை நடுப்பகுதிகள் மற்றும் பொதுப் பூங்காக்களை பசுமையாக்க எளிதான தேர்வாக இருந்தது

இந்த மரம் பூக்கும் பருவத்தில், அதிகளவு மகரந்தத்தை வெளியிடுகிறது, இது சுற்றியுள்ள பகுதிகளில் பரவி, அருகில் வசிக்கும் மக்களை பாதித்து பல விதமான நோய்களை உருவாக்குகிறது என்றும் இதற்குத் தீர்வு காணும் விதமாக, வனப்பகுதி, அரசு நிலங்கள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகில் கோனோ கார்பஸ் மரங்களை நடுவதை நிறுத்த அரசு முடிவெடுத்துள்ளது. .நடப்பட்டுள்ள மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறது." என தமிழ்நாடு அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சிதைந்து வரும்  பிம்பம்” 

த்தில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததால் கடுமையாக விலைவாசி உயர்ந்து வருகிறது. வேலையில்லா தீண்டாட்டமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மோடியரசின் தவறான பொருளாதார திட்டத்தால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடும் வீழ்ச்சையை நோக்கி செல்கிறது.

இதனால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பணவீக்கத்தால் மக்கள் வாங்கும் சக்தி குறைந்துள்ளது.

மக்கள் மத்தியில் பிரதமர் மோடியின் பிம்பம் சிதைந்து வருகிறது என C-Voter நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் மோடி அரசு குறித்து C-Voter ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டது.

அதில், ”கண்களில் நீர் வரவழைக்கும் அளவில் தொடர்ந்து உயரும் பணவீக்கம் இந்தியக் குடும்ப வரவு செலவுத் திட்டங்களை அழுத்தி, செலவு செய்யும் சக்தியைக் குறைக்கிறது. மோடி பிரதமரான பிறகு விலை உயர்ந்துள்ளது. பணவீக்கம் தங்களின் வாழ்க்கைத் தரத்தை பாதித்துள்ளது என மக்கள் கருதுகின்றனர்.

பணவீக்கம் நடுத்தர மக்களையும் அடித்தள மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. அவர்களது வாழ்க்கைத் தரம் சரிவடைந்துள்ளது. விலைவாசி தாறுமாறாக உயர்ந்து வருவதால் பிரதமர் மோடி மீது மக்களிடையே அதிருப்தி மேலோங்கி வருகிறது.

சில பெரும் பணக்காரர்களுடன் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி நின்றுவிட்டது. அது இந்தியா முழுவதும் பரவவில்லை. தேங்கி நிற்கும் ஊதியங்கள், உயர் வாழ்க்கைச் செலவுகள் ஆகியவை எதிர்கால வாய்ப்புகளை மழுங்கடிக்கச் செய்தன. தங்களது வாழ்க்கைத் தரம் குறித்து இந்தியர்கள் நம்பிக்கை இழுத்து வருகிறார்கள்” என்றார். கூறினார்.


நீரில் கரைத்த ஆயிரம் கோடிகள் 

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் அமாவாசை யன்று நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.


 இது மாநில அரசின் நிர்வாக அலட்சியத்தால் நடைபெற்றது. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல்வர் யோகி ஆதித்யநாத்,  பாபா ராம்தேவ் மற்றும் சாமியார்கள் புடைசூழ கங்கையில் மூழ்கி எழுந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். 


ஒன்றிய அமைச்சர்களும் பாஜக முதலமைச்சர்களும் நீராடி வருகிறார்கள். இவர்களுக்காக விஐபி பகுதி, விஐபி பாஸ், விஐபி பாதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பாவி பக்தர்கள் 4 கி.மீ நடந்து வந்தால்தான் நீராடி விட்டுச் செல்லமுடியும். 


பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாக


த்தின்  திறமை யின்மையால் நகரில் எல்லா இடத்திலும் போக்குவரத்து நெரிசலையே காணமுடிகிறது. விஐபி பிரமுகர்களுக்கு செய்யப்பட்ட பாது காப்பு ஏற்பாடுகளில் நான்கில் ஒரு பகுதிகூட சாமானிய மக்களுக்கு செய்யப்படவில்லை.

 கோடிக்கணக்கான மக்கள் கூடும் கும்பமேளா வுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறிய உத்தரப்பிரதேச நிர்வாகம் விஐபி நீராட லுக்கு மட்டும் அக்கறை காட்டியதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

கும்பமேளா சிறப்பாக நடைபெற்று வருவதா கவும் ஏற்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவும் பாஜக ஆதரவு ஊடகங்கள் நேரலை ஒளிபரப்பில் ஈடுபட்டிருந்த போதே சில பெண்கள் இடை மறித்து தங்களது குமுறலை வெளிப்படுத்தினர்.

 கங்கை நதியின் கரையோரங்களில் எங்கு பார்த்தாலும் மலம் கழிக்கப்பட்டு திறந்தவெளி கழிப்பிடமாகக் காட்சியளிக்கிறது.  சாமியார்க ளும் அகோரிகளும் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதாகவும் இந்துக்கள் புனித நதி என்று கருதும் கங்கை அசுத்த நதியாகி பல ஆண்டுகள் ஆகி விட்டதாகவும் பொதுமக்கள் வேதனை தெரி வித்தனர்.

கரையோரங்களில் பல இடங்களில் தனியார் சொகுசு விடுதிகள், நட்சத்திர விடுதிகளில் உள்ள வசதிகளோடு கூடாரங்களை அமைத்துள்ளன. அப்பாவி மக்களுக்கு கும்பமேளா. தனியார் பெரு நிறுவனங்களுக்கு பணத்தை கொட்டித் தரும் விழாவாக மாறியுள்ளது.

 விமான நிறுவனங்களும் பிரயாக்ராஜ் செல்லும் விமானங்களின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி கொள்ளையடிக்கின்றன.

 மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் கங்கை நதியை தூய்மைப்படுத்த 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்றும் அசுத்த மான நதியாகவே அது  காட்சியளிக்கிறது. 

கங்கை பாயும் உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மாநிலங்களில் கங்கையின் நதியோரம் கழிவுநீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் வெறும் அறிவிப்பாகவே உள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?