கொழும்பும்-கொச்சியும் இணைகிறது..

தமிழகத்தின் மீது கோபத்தில் இருக்கும்கேரளா மூலம் தமிழக மக்கள் மீது வெறுப்பில் இருக்கும் இலங்கை தனது பழி வாங்கல்களை நிறைவேற்றிக்கொள்ள திட்டம் தீட்டி உள்ளதாம். தமிழக அமைதியை சீர்குலைக்கவும், பதட்டத்தை ஏற்படுத்தவும், தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தவும், கேரளாவை தனது கைப்பாவையாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்புஈழத்தில் தமிழின ஒழிப்பு போர் உச்சகட்டத்தில் இருந்தபோது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே.நாராயணன் இருந்தார். வெளியுறவுத்துறை செயலாளராக சிவசங்கர மேனன் இருந்தார். இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.அப்போது அவர்கள் இருவருமே தமிழர்களுக்கு -விடுதலைப்புலிகளுக்கு எதிரான மொள்கை முடிவுகளை இந்திய அரசு எடுக்க முக்கிய காரணமாக இருந்தனர்.அதற்காக அப்போதே அவர்கள் இருவரும் கடும் எதிர்ப்புகளையும்,கண்டனங்களை தமிழ் நாட்டில் இருந்தும் ,இலங்கை-உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெற்றனர். இறுதிவரை அவர்கள் தமிழர்களுக்கு எதிராகவும்,ராஜ பக்ஷேக்கு ஆதரவாக நடந்து கொண்டனர். தற்போது தமிழகத்திற்கு...