இடுகைகள்

கும்பமேளா மறைக்கப்படும் குழப்பம் வி.ஐ.பி. வருகை விழா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மறைக்கப்படும் கும்பமேளா

படம்
 மரணங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் 48 பேர் உயிரிழந்த நிலையில், அந்த மரணங்களைக் கூட மறைத்து தவறான கணக்கையும் காட்டி, உ.பி. அரசைக் ஒன்றிய பா.ஜ.க அரசு காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு உண்மையான பக்தி இருந்தால் பக்தர்களுக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. பக்தியை கோவிலுக்கு வெளியே அரசியலில் மட்டும் காட்டக் கூடியது தான் பா.ஜ.க. கட்சியும், அதனைச் சேர்ந்தவர்களும். அதனால்தான் அலட்சியமாக கும்பமேளாவை நடத்தி, அப்பாவி மக்களையும் பலி வாங்கி இருக்கிறார்கள். உலகில் அதிகமானவர்கள் கூடும் விழாக்களில் ஒன்றாக கும்பமேளா இருக்கிறது. இந்தியா முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் கூடும் விழாவாக இது அமைந்தது. உ.பி.மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கடந்த 29 ஆம் தேதி மட்டும் 9 கோடி பேர் வந்ததாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கங்கை கரையில் உ.பி.அரசாங்கம் வைத்திருந்த தடுப்புகள் எல்லாம் ஒரு சில நிமிடங்களில் பறந்துவிட்டது. ஜனவரி 29 ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் 2 மணி வரை அகாரா மார்க் பகுதியில் பெருங்கூட்டம் அலை மோதியது. தடுப்புகளையும் தாண்டிக் குதித்து...