ஒரு கம்யூனிஸ்ட் கலைஞனின் கதை.
பாவலர் ஓம் முத்துமாரி. இவரை அவரது நிகழ்ச்சி ஒன்றின் போதுதான் தற்செயலாக பார்த்தேன். அதுவும் கூட்டம் எதற்காக கூடியுள்ளது என்று எட்டிப்பார்த்த போதுதான் அவரின் கலை நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. ஆனால் சிறிது நேரம் பொழுதை போக்கலாம் என்று பார்க்க ஆரம்பித்து இரண்டு மணி நேர நிகழ்ச்சியின் முடிவில்தான் பிரமிப்புடன் வெளியேறினேன். நாட்டு நடப்பை பொதுவுடமை தத்துவங்களை இனிமையான் வசிகரிக்கும் குரலில் பாடுவதுடன் ஆட்டமும் பாவலர் போடுவதை காண கொடுத்துவைக்க வே ண்டும் .அ திலும் அவர் கிழவியாக வந்து காதில் பாம்படத்துடன் சுழன்று ஆடி நாட்டு நடப்புகளை கிண்டல் செய்து பாடுவதை பார்க்க வேடிக்கையாக இருப்பதுடன் மட்டுமல்ல நம்மை சிந்திக்கவும் வைத்துவிடும். அவர் மறைவை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை . பாவலர் ஓம் முத்துமாரி மறைந்துவிட் டார். மண்ணில் புதையுண்டாலும் 70 ஆண்டுகாலம் ஆடிய அவரது கால்களின் சலங்கை ஒலிச் சத்தம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ... “வறுமை நமக்கு மாமன் முறை சிறுமை நமக்கு தம்பி முறை பொறுமை நமக்கு அண்ண...