RSSன் தேசியவாதம்
அதிகரிக்கும் ஏழை- பணக்காரர் வரம்பு. உ லக சமத்துவமின்மை அறிக்கை 2022 இந்தியாவில் அப்பட்டமாக வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆனால், தற்போதைய ஆட்சியின் கீழ், விதந்தோதப்படுகிற பொருள் குவிப்பு மற்றும் சமூக பிளவுகளை தீர்க்கத் தேவையான ஒரு விவாதத்தைக் கூட பயங்கரவாதச் செயல் ம போல நடத்த வேண்டிய நிலையே இருக்கிறது. தேசம் என்பது “மக்கள் சமூகத்தைக் கொண்ட ஒரு கற்பிதம். அங்கு உண்மையில் ஏற்றத் தாழ்வும், சுரண்டலும் இருந்தாலும் கூட தேசம் என்பது ஆழ்ந்த, சமநிலையில் உள்ள தோழமையான மக்கட் சமூகம் என எப்போதும் கற்பித்துக் கொள்ளப்படுகிறது”. – பெனடிக்ட் ஆண்டர்சன். “காசியிலிருந்து கோவை வரை கடவுள் சிவன் எங்கெங்கும் உள்ளார்” – மோடி, பிப்ரவரி 24, 2017. “உலகில் உள்ள மிகவும் ஏற்றத்தாழ்வான நாடுகளில் ஒன்றாக இன்றைய இந்தியா உள்ளது” – உலக சமத்துவமின்மை அறிக்கை 2022. அறிஞர் பெனெடிக்ட் ஆண்டர்சனின் மிகவும் புகழ் பெற்ற கூற்றுப்படி அன்றைய ஐரோப்பா மொழி வழி தேசங்களாக உருவாகி, மதக் குழுக்களுக்கு பதிலாக ஒரு மதச்சார்பற்ற, அரசியல் சமூகமாக உருவானது. ஆனால், இன்றைய இந்தியாவோ திரும்பிச் செல்ல முடியாத வ...