‘நாய்க்கறி’
தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் இருந்து நாய்கள் கடத்தப்பட்டு அவை வியட்நாம் ஓட்டல்களுக்கு சப்ளை செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இப்படி கடத்தப்படும் நாய்கள் ஆண்டுக்கு 2 லட்சம் என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. சாதாரணமாக நம்மூர்காரங்க தெருநாய்களை பிடிச்சுட்டுப்போய் விஷ ஊசி போட்டு கொல்லும் செய்தியே நம்மை உலுக்குகிறது. ஆனால் தாய்லாந்தில் வீட்டு நாய்கள், தெரு நாய்கள் எல்லாமே அடக்கம். இதை தடுத்து நிறுத்தக் கோரி தாய்லாந்து, வியட்நாமில் செயல்பட்டு வரும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் போராடி வருகிறது. நாய்களின் கறி உடலுக்கு வெப்பத்தை கொடுப்பவை. அதனால் வியட்நாமுக்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் மக்கள் குளிர் காலங்களில் நாய்களின் கறியை விரும்பி சாப்பிடுகின்றனராம். இதனால் வியாட்நாம் ஓட்டல்களில் ‘நாய்க்கறி’க்கு அதிகம். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் தாய்லாந்தின் வடகிழக்கு பகுதிகளிலிருந்து மீகாங் ஆற்றின் வழியாக நாய்களை கடத்தி வந்து வியட்நாம் ஓட்டல்களில் விற்று பணம் சம்பாதிக்கின்றனர். 10 அல்லது 20 நாய்களை பிளாஸ்டிக்...