லாலிபாப்.....!
கூ குள் நிறுவனம் ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பான ஆண்ட்ராய்ட் 5.0 பதிப்பை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. எதிர்பார்த்ததுபோலவே இந்த பதிப்பிற்கு லாலிபாப் என்ற பெயரே வைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட இப்புதிய பதிப்பு முற்றிலும் புதிய அனுபவத்தை தரக்கூடியதாக வெளிவந்திருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் முகப்பு மற்றும் பக்க வடிவமைப்பு புகழ் பெற்றது. பளிச்சிடும் வண்ணம் மற்றும் கண்களைக் கவரும் விதத்தில் அமைந்த எழுத்துத் தோற்றமும் இப்புதிய பதிப்பை மெருகேற்றியுள்ளது. எழுத்துத் தோற்றத்தை சிறப்பாகக் காட்ட அளவாகவும், அழகானதாகவும் தோற்றம் காட்டும் விதத்தில் நிழல் பின்புலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பதிப்பின் கூடுதல் சிறப்பம்சம் ஸ்மார்ட் போன் மட்டுமல்லாது, டேப்ளட், ஸ்மார்ட் வாட்ச், ஆண்ட்ராய்ட் டிவி, வாகனங்களை இயக்கவும், வழிகாட்ட உதவும் கருவி என அனைத்திற்கும் ஏற்ற வகையில் ஒருங்கிணைந்த ஒரே இயங்குதளமாக உருவாக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்திகள், அறிவிப்புகளைக் காட்டும் நோட்டிபிகேசன் பகுதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நாம் போனைப் பயன்படுத்தும்போது நமக்...