"தணியாத தாகம் "
கோடையில் அதிகரிக்கும் தாகத்தைக் குறைக்க இளநீர், நீர்மோர் போன்ற பானங்களை பயன்படுத்துவது என்பது பழங்காலம் முதலே இருந்து வருகின்றது. ஆனால் தற்போதைய நவீனகாலஅந்நிய கலாச்சார தாக்கத்தால் மக்கள் கோடைகாலங்களில் செயற்கை ரசாயன குளிர் பானங்களை அதிகஅளவில் குடிக்கின்றனர். தற் போது செயற்கையாக தயாரிக்கப்படும் சோடா அல்லது இனிப்பூட்டப்பட்ட குளிர்பானங்கள் என்பது மக்களுக்கு இரண்டாம் தர சர்க்கரை நோயை உருவாக் கக் கூடும் என்று ஆய்வாளர் கள் கண்டறிந்துள்ளனர். குளிர்பானங்களை வரம்பின்றி அருந்துவதால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1.8 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர்.சமீபத்தில் கூட அமெரிக்காவில் அதிகமாக கோக்க கோலா குறித்த இளம்பெண் மரணமான செய்தியை படித்திருப்பீர்கள். ஆண்டுதோறும் 1.33 லட்சம் பேர் வரை நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 44 ஆயிரம் பேர் இருதய நோயாலும், 6 ஆயிரம் பேர் புற்று நோயாலும் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் சென்ற ஆண்டில் மட்டும் 25 ஆயிரம் பேர் குளிர்பானங்களை அதிக அளவு அருந்தியதால் உயிரிழந்துள்ளனர். அதி...