ஆனால் உண்மை எது?
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், இதனால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் சொல்கிறார் மோடி.
ஆனால் உண்மை?
திமுகவுக்கு உள்ள செல்வாக்கை பார்த்து என்.டி.ஏ. கூட்டணிதான் அதிர்ச்சி அடைந்துள்ளது.
மக்கள் நல திட்டங்களால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகம் முழுவதும் அலை அடிக்கிறது.
இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லும் என்று நம்மூர் கருத்துக்கணிப்புகள் மட்டுமல்லாது, உலகின் மிகப்பெரிய கணிப்புச் சந்தையான பாலி மார்க்கெட்டும் தனது கணிப்பை சொல்லி இருக்கிறது.

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்கப்போகிறார் என்பது தெரிந்ததால்தான் தவெக பக்கம் தாவ இருந்த காங்கிரஸ் கூட திமுக கூட்டணியிலேயே தொடர்கிறது.
தேமுதிக உள்ளிட்ட புதுப்புது கட்சிகளும் திமுக கூட்டணிக்கு வந்திருக்கின்றன. திமுக கூட்டணியில் 28 கட்சிகள் உள்ளன. 28 கட்சிகளை கூட்டணியில் வைத்து பிரம்மாண்டம் காட்டும் திமுக, திருச்சியில் நேற்று 10 லட்சம் தொண்டர்களை திரட்டி பிரம்மாண்ட மாநில மாநாடு நடத்தி இருக்கிறது.
திமுகவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த செல்வாக்கு கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறது என்.டி.ஏ.

இந்த நிலையில் திருச்சிக்கு வரும் பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, என்.டி.ஏ. தொண்டர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் தோசையை திருப்பி போட்டிருக்கிறார்.

’’நாளை, மார்ச் 11 ஆம் தேதி மாலை 6:30 மணியளவில், திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பேரணியில் தமிழ்நாட்டின் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் நானும் இணைவேன்.
மாநிலம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகரித்து வரும் செல்வாக்கால் திமுக அதிர்ச்சியடைந்துள்ளது. திமுகவின் தவறான நிர்வாகத்தையும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் தமிழக மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அதனால்தான், அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்’’ என்கிறார் மோடி.
மு.க.ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள்.
இது மக்களிடையே அவருக்கு இருக்கும் ஆதரவு அலையினை காட்டுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி செல்லும் பிரச்சாரங்களுக்கு எல்லாம் மக்கள் அவ்வளவாக ஆதரவு காட்டாத போதே அந்த கூட்டணியின் செல்வாக்கு அதிகமாக சரிந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. வாய்ப்பேச்சின் மூலம் இதை சரிக்கட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறாரா பிரதமர் மோடி?
தொண்டையில் சிக்கிய முள்!
“அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிபர்கள் அனைவரும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் பிடிக்குள் வந்துவிட்ட சூழலில், ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic) நிறுவனத்தின் நிறுவனர்கள் மட்டும் அவரது அதிரடி உத்தரவுகளுக்குப் பணிய மறுத்து வருவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”
“ ‘கிளாட்’ (Claude) என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கிய இந்த நிறுவனம், தனது தொழில்நுட்பத்தைப் போர்க் குற்றங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக நிற்கிறது.” என்று விவரிக்கிறது.
ஏகாதிபத்தியங்கள் தமது நாட்டின் கார்ப்பரேட்டுகள் உலகை சூறையாடுவதற்கும் – இயற்கை & கனிம வளங்கள், மனித வளம், சந்தை உள்ளிட்டவற்றுக்காகவும் மேலாதிக்க வெறி கொண்டு உலக நாடுகளின் மீது பாய்கிறார்கள்.
அமெரிக்காவானது தான் திணிக்கும் திட்டங்களையும் ஒப்பந்தங்களையும் ஏற்க மறுப்பவர்களையும் தனக்கு எதிராக கூட்டணி கட்டிக்கொண்டு டாலருக்கு சவால் விடுபவர்களையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பகிரங்க ஆக்கிரமிப்புப் போரையும் நடத்தி வருகிறது. அமெரிக்க முதலாளிகளோ தமது நலனுக்காக நடத்தப்படும் இப்போரை ஆதரித்து அதிபர் ட்ரம்புக்கு துணை நிற்கிறார்கள்.
ஆனால் இந்த பட்டியலில் சேர மறுத்து, ரத்தம் குடிக்கும் ஓநாயான ட்ரம்ப்பின் அரசை அம்பலப்படுத்தும் வகையில் தனித்து நிற்கிறது ஒரு கார்ப்பரேட் நிறுவனமான ”ஆந்த்ரோபிக்”.
அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ், மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க், கூகுளின் சுந்தர் பிச்சை மற்றும் ஓபன்ஏஐ-ன் சாம் ஆல்ட்மேன் போன்ற உலகின் பெரும் செல்வந்தர்கள் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அனைவரும் டொனால்டு டிரம்ப்பின் கொள்கைகளுக்கு இணங்கிச் செயல்படத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி (Dario Amodei), பென்டகனின் சில நிபந்தனையற்ற கோரிக்கைகளை நிராகரித்து ஜனாதிபதியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்.
குறிப்பாக, ”அமெரிக்கக் குடிமக்களைப் பெரிய அளவில் உளவு பார்ப்பதற்கோ (Mass surveillance) அல்லது மனிதக் கட்டுப்பாடற்றத் தன்னாட்சி ஆயுதங்களாகவோ (Autonomous weapons) தனது மென்பொருளைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் அமோடி பிடிவாதமாக உள்ளார். இந்தத் துணிச்சலான முடிவு காரணமாகவே, தற்போது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (App Store) ”கிளாட்” மென்பொருள் முதலிடத்தைப் பிடித்துள்ளது”
மார்செல்லோ
மால்பிகி
💉 உயிரினங்களின் உடற்கூறு கட்டமைப்புகளை மைக்ரோஸ்கோப் மூலம் ஆராய்ச்சி செய்வதற்கு அடித்தளமிட்ட மார்செல்லோ மால்பிகி (Marcello Malpighi) 1628ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி இத்தாலியின் தலைநகர் பொலோக்னா என்ற ஊரில் பிறந்தார்.
பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டே மருத்துவமும் மற்றும் பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வந்தார். சுவை அரும்புகள், மூளையின் அமைப்பு, பார்வை நரம்பு, கொழுப்பு தங்கும் இடங்கள், ரத்தத்தில் ஏற்படும் நிறமாற்றங்கள், உடற்கூறியல், உடல் இயங்கியல் குறித்தும் ஆராய்ச்சி செய்துள்ளார்.
மைக்ரோஸ்கோப் மூலம் தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்களின் உடற்கூறு கட்டமைப்புகளையும் ஆராய்ந்தார். இவர் கருவியல், தாவர உடற்கூறியல், திசு அமைப்பியல், ஒப்பீட்டு உடற்கூறியலின் முன்னோடி எனப் போற்றப்பட்டார்.
நுரையீரல் செல்களை சோதனை செய்து பார்த்து அங்கு சிறிய மெல்லிய சுவர் கொண்ட ரத்த நுண் குழாய்கள் இருப்பதை கண்டறிந்தார். மேலும் இவைதான் தமனிகளையும், சிரைகளையும் இணைக்கின்றன என்பதையும் ஆராய்ந்து கூறினார்.
அதன்பிறகு கண்டறியப்பட்ட பல உடல் உள்ளுறுப்புகள் மால்பிஜியன் துகள்கள், மால்பிஜியன் அடுக்கு, மால்பிஜியன் குழல்கள் என இவரது பெயரால் அடையாளம் காணப்பட்டன.
அறிவியல் வரலாற்றில் முக்கியமான கண்டுபிடிப்புகளை கண்டறிந்த மார்செல்லோ மால்பிகி 66வது வயதில் (1694) மறைந்தார்.





