நச்சு ஆலை ஸ்டெர்லைட்
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் தான் வெடிக்க காத்திருக்கும் வெடிகுண்டாக நச்சு ஆலை ஸ்டெர்லைட் உள்ளது . இந்த ஆலை யை மூட வெண்டும்.அகற்ற வேண்டும் மக்கள் வாழ்வை காப்பாற்ற வே ண்டும் என்று தூத்துக்குடி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் மத்திய ,மாநில அரசுகள் இது பற்றி கண்டு கொள்ளவே இல்லை. இந்தியாவில் எல்லா மாநிலங்களும் இந்த ஸ்டெர்லைட் ஆலையை இதன் நச்சுத்தன்மையை கணக்கில் கொண்டு தங்கள் மாநிலத்தில் இயங்க அனுமதி மறுத்த போது இந்தியாவின் வீர மங்கை ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதல்வர்.அவர் வீரத்தை காட்டி பயப்படாமல் [போனால் மக்கள் உயிர்தானே போகிறது.ஆனால் வருவது...?என்ற கணக்கில் ]தமிழகத்தில் அதுவும் தூத்துக்குடி பகுதியில் இடம் ஒதுக்கி சிகப்பு கம்பளம் விரித்தார். பலன் அவருக்கும்,சசிகலாவுக்கும்,சிதம்பரத்துக்கும் [இதில் எல்லாம் ஒற்றுமையாக செயல்படுவார்கள்]வேதாந்தாவின் பங்குகள் பணபபெட்டியுடன் கிடைத்தது. அப்போது முதல் இந்த ஆலை எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருகிறது. அரசியல் கட்சியினரும் முதலில் போராடினார்கள் பின்னர் ஸ்டெர்லைட் ஆலை அவர்களை கவர்[...