இடுகைகள்

மக்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏமாந்த சதாம் உசேன் .

படம்
சதாம் உசேன் அமெரிக்காவின் பிடியில் படுகொலை ஆன கதை நம்மை உலுக்கியது தெரியும் இது வேறு  சதாம் உசேன் . மின்னஞ்சலில்  வந்த தகவலை நம்பி ரூ.1.39 லட்சத்தை பறி கொடுத்தார் திருப்பத்தூர் இன்ஜினியர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சிவராஜ்பேட்டையை சேர்ந்தவர் சதாம் உசேன். பி.இ முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கிறார்.  இந்நிலையில் சதாம் உசேனின் இமெயில் முகவரிக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு இமெயில் வந்தது. அதில், நாங்கள் குறிப்பிடும் வங்கியில் நீங்கள் 5 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.4.50 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் இதுகுறித்த மேல் விவரம் அறிய ஒரு செல்போன் நம்பரும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து கடந்த 9, 10ம் தேதிகளில் இமெயிலில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட சதாம் உசேன், பணம் செலுத்த வேண்டிய விவரம் குறித்து கேட்டுள்ளார். அப்போது மறுமுனையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசிய ஒரு பெண், தான் குறிப்பிடும் வங்கிகளில் பணம் செலுத்தினால் பெரிய நிறுவனங்கள் மூலம் உங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம...

இன்று உலக மக்கள்தொகை தினம்.

படம்
1987, ஜூலை 11ல் உலகின் மக்கள்தொகை 500 கோடியை தொட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஜூலை 11ம் தேதி, மக்கள்தொகை தினத்தை ஐ.நா., உருவாக்கியது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சுற்றுச்சூழல் சீர்கேடு, வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு அடிப்படை காரணம், மக்கள்தொகை உயர்வு. ஆண்டுதோறும் வேகமாக உயரும் மக்கள் தொகையால் ஏற்படும் பாதிப்புகள், அதைக் கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஜூலை 11ம் தேதி, உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் ஆண்டுதோறும் 18 வயதுக்கும் கீழே திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 60 லட்சமாக உள்ளது. மறுபுறம் 32 லட்சம் பேருக்கு பாதுகாப்பில்லாத கருக்கலைப்பு நடக்கிறது. இளம் வயது திருமணம் காரணமாக, கர்ப்ப கால இறப்பும் அதிகரிக்கிறது. 18 வயதுக்குட்பட்ட திருமணங்களை, அறவே ஒழிப்பதற்கு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். தனிமனித கட்டுப்பாடும் இதில் அவசியம்.  உலக மக்கள் தொகை 1950ல் 253 கோடியாக இருந்தது. தற்போது 713 கோடியாக உயர்ந்துள்ளது.   2050ல் இந்த எண்ணிக்கை 955 கோடியாகவும், 2100ல் 1085 கோடியாகவும் உயரும்....