இடுகைகள்

தோழர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தோழர் மாயாண்டி பாரதி.

படம்
அவர் எங்கே சென்றாலும் அவரைச் சுற்றி ஒரு சிறு கூட்டமே கூடிவிடும். அவருடைய விமர்சனங்கள் கூர்மையாக இருக்கும். ஆனால் எவர் மனதையும் புண்படுத்தாது. மார்க்சியத்தின் மீதும், அதன் இறுதி வெற்றி நிச்சயம் என்பதிலும் அவருக்கு உறுதியான நம்பிக்கையுண்டு. ‘டால்ஸ்டாயின் ஆறடி நிலம்‘, ‘அரசு என்றால் என்ன’ போன்ற சில நூல்களையும் அவர் எழுதியுள்ளார். ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறையினருக்கு திருமணம் நடத்திவைத்த பெருமையும் அவருக்கு உண்டு. 12 ஆண்டுகள் சிறைவாசம், பல ஆண்டுகள் தலைமறைவு வாசத்தை அனுபவித்துள்ளவர்தான்  ஐ.மா.பா.என்று அழைக்கப்படும் தோழர் மாயாண்டி பாரதி.  மாபெரும் தேசபக்தராகவும், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்த கம்யூனிஸ்ட்டாகவும் ஏழை- எளிய மக்களிடம் மிகுந்த பரிவு கொண்ட மாபெரும் மனிதாபிமானியாகவும் விளங்கினார் . மிகச் சிக்கலான விஷயங்களைக் கூட சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும்படி எழுதுவதிலும், விளக்குவதிலும் அவருக்கு இணை அவரேதான். ஏழை - எளிய மக்களுடன் மிகவும் ஒன்றிவிடுவார். கம்யூனிஸ்ட் இயக்கப் பாடகர்களாகயிருந்த பாவலர் வரதராஜன் மற்றும் அவரது தம்பிகளுக்கு ...