மதம் பிடித்தவர்கள்.......,
தனது முகநூலில்[Facebook] கடவுள் இல்லையென்று தனது கருத்தைஎழுதியதற்காக 30 மாதச் சிறைத்தண்டனை பெற்றுள்ளார் இந்தோனேசியர் ஒருவர். Facebookஇல் ஒரு நாத்திகக் குழுவை உருவாக்கிய இந்நபர் அதில் நகைச்சுவையான கருத்துக்களையும் முகமது நபியை பற்றியும் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார். மதரீதியான வெறுப்பையும்,மத எதிப்பையும் பரப்பினாரமென்று இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.இந்தோனேசியாவில்உள்ள மேற்கு சுமாத்ராவில் Muaro Sijunjung என்ற இடத்தில்வழ்க்கு நடை பெற்றுள்ளது. உலகில் உள்ள மக்கள் தொகை அதிகமான முஸ்லீம் நாடு இந்தோனேசியா.நீதிமன்றத்தால் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அவருக்கு கொடுக்கப்பட்டது.ஆனாலும் சில மதவெறியர்கள்அவரை நீதிமன்றம் முன்பாக காவல்துறையின் ஆதரவுடன் அடித்துதாக்கியுள்ளார்கள். மதம் ஆதரவாக பேசுபவர்களுக்கு உரிமை இருப்பது போல் மதம்.கடவுள் நம்பிக்கை யற்றவர்களுக்கும் அக்கருத்துக்களை வெளியிட உரிமை மறுக்கப்படுவது மோசமானது. சாலையில் மேடை அமைத்து காதை கிழிக்கும் ஒலிபெருக்கி வைத்து மதப்பிரச்சாரம் செய்யும் மனிதர்களுக்கான உரிமை இறை மறுப்பாளர்களுக்கு இல்லாதது ஏன்? தொலைக்காட்சி மூலமும் மணிக்கண...