குழந்தையை வீசும் சடங்கு?
கீழேபலர்கூடியிருக்க, ஒரு குழந்தை 30 அடி கோயிலின் உச்சியிலிருந்து தூக்கி வீசப்படுகிறது. மதச் சடங்குகளை நிறைவேற்றும் பொருட்டு, கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட்டில் சமீபத்தில் நடந்துள்ளது. உள்ளூர்வாசிகள் இவ்வாறு செய்தால் புதிதாக பிறந்த குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் என நம்புகின்றனர்.
இது முட்டாள்தனம் என்பதை விட வேறு என்ன பெயரிட்டு அழைக்கமுடியும்.
உடல்நலத்தை விட தவறினால் உடல் மோசம் அடையும் வாய்ப்புகள்தான் அதிகம்.
இவ்வாறு காற்றில் தூக்கி வீசப்படும் குழந்தைகள் 2 வயதுக்கும் கீழே இருப்பவையே. அவ்வாறு தூக்கி வீசப்பட்டுகீழே வரும்குழந்தைகளை அவர்களின் பெற்றோர் துண் விரித்து பிடித்துக் கொள்ள வேண்டும்-பிடித்துக் கொள்கின்றனர்.
துண்டு விலகினாலோ -வேகமாக காற்று வீசுவதாலோ,அல்லது குழந்தை அதிக பயத்தினால் அசைவு அதிகமாகி பெற்றோர் குறி தவறி விட்டால்?
நாக்ரலா கிராமத்தில் நிகழ்ந்த திகம்பேசுவர கோயில் திருவிழா காணொளிக் காட்சியில் கோவிலின் மேற்புரத்தில் ஒரு நபர் அமர்ந்து கொண்டு குழந்தைகளை மேற்கண்டவாறு தூக்கி வீசுகிறார்.
அக்குழந்தைகளை கீழே காத்திருக்கும் கூட்டம் பிடித்துக் கொள்கிறது. ஒன்றன்பின் மற்றொருவராக குழந்தைகளை கோவிலின் மேலிருக்கும் அவரிடம் தர அவர் அக்குழந்தைகளை கீழே வீசுகிறார். அவ்வாறு கீழே விழப் பயப்படும் குழந்தை அவரின் ஆடையை கையால் பிடித்துக்கொண்டு தொங்கினால் குழந்தையின் கையை வாயால் கடித்து கீழேஎறிகிறார். பல குழந்தைகள் பயத்தினால் கதறிஅழுவதைதான் பார்க்க முடிகிறது.
பக்தர்கள்,வேண்டுதல் என்ற பெயரில் செய்யும் இந்த காரியத்தில் உள்ள ஆபத்தை அறியாமலா இருப்பார்கள்.
இதை தடுக்க முயற்சி செய்யவில்லையா?என்று அங்குள்ள அரசு அலுவலர்களை கேட்டால் "இது முட்டாள்தனமான வேண்டுதல்தான்.ஆனால் இதை தடுத்தால் மதரீதியான செயலை தடுப்பதாக நெருக்கடி வந்துவிடும் .என்றே பயப்படுகிறோம்.என்கிறார்கள்.
அப்போ" இது போன்று குழந்தைகளை கீழே எறியும் இடத்தில் குழந்தை தவற் விழுந்தாலும் பலமான காயங்கள் ஏற்படாதபடி சில வசதிகளை செய்து கொடுத்து புண்ணியத்தையாவது தேடிக்கொள்ளலாமே?"
மேல்சாதிக்காரர்கள் சாப்பிட்ட இலையில் உருளுவது-குழந்தையை கோபுரத்தில் இருந்து வீசுவது .அட கர்நாடகக் காரர்களின் பக்திக்கு ஒரு அளவே இல்லையா?
________________________________________________________________________