வங்கத்தில் பங்கம்?


ம்பிகேஷ் மஹாபத்ரா என்கிற பேராசிரியர் சிறையிலிருந்து வெளிவந்துவிட்டார். 
மிகவும் நல்ல முறையில் வேதியியல் வகுப்புகளை எடுக்கக்கூடிய இந்தப் பேராசிரியர் அந்தக் காரணங்களுக்காக பேசப்பட்டிருக்க வேண்டியவர். ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இவர் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும் பல திரிணாமுல் கட்சித் தலைவர்களைப் பற்றிய கேலிச் சித்திரங்களை மின்னஞ்சலில் அனுப்பியதற்காகக் கைது செய்யப்பட்டார். பெண்ணிற்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்ததாக அவர் மீதும், அவருடைய அண்டை வீட்டுக்காரர் சுப்ரதா சென்குப்தா மீதும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.
தீக்கதிர்

ரயில்வே அமைச்சர் மாற்றம், தேசிய நாளிதழ்களை நூலகத்தில் போட வேண்டாம் என்ற முடிவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி வெளியாகி வரும் கேலிச்சித்திரங்களை மின்னஞ்சல் மூலமாகப் பலருக்கு அவர்கள் அனுப்பியதுதான் கைதுக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.
ஆனால், இதற்குப் பின்னால் ஊழல் செய்வதற்கான வழிகளை இந்த இருவரும் அடைத்ததே திரிணாமுல் காங்கிரஸ்காரர்களை ஆத்திரப்படுத்தியது என்று இதன் பின்னணிக்கதை வெளியாகியது. இவர்கள் வசிக்கும் புதிய காரியா மேம்பாட்டு கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் கொல்கத்தா நகரின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது. இந்தப்பகுதியில் வீட்டுமனைகளின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது. இதனால் சங்கத்திற்குச் சொந்தமான பல இடங்களை தங்கள் இஷ்டத்திற்கு விற்றுக்கொள்ள சில ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் முயற்சித்தனர். இவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பின்னணியைக் கொண்டவர்கள். கூட்டுறவு சங்கம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. அந்த எதிர்ப்பை ஒருங்கிணைத்தவர்கள்தான் இந்த சுப்ரதா சென்குப்தா மற்றும் அம்பிகேஷ் மஹாபத்ரா. இதில் சுப்ரதா சென்குப்தா சங்கத்தின் செயலாளராகவும், அம்பிகேஷ் துணைச் செயலாளராகவும் பொறுப்பில் இருந்து வருகிறார்கள்.தற்போது திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.


இந்த சங்கத்திற்குப் புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிறது. அதில் அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி வெற்றி பெறுவதற்கான முயற்சி நடக்கிறது. மே 20 ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடக்கும் இந்தத் தேர்தலுக்காக, ஏப்ரல் 28 முதல் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அளிக்கப்பட வேண்டும்.
தங்களின் தில்லுமுல்லுகளுக்குத் தடையாக இருக்கும் அம்பிகேஷ் மற்றும் சுப்ரதா ஆகிய இருவரையும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுப்பதற்காகவே கைது நடவடிக்கைகளுக்கு ஆளும்கட்சியினர் முயற்சித்துள்ளனர். ஆனால் இது இவ்வளவு பெரிய பின்விளைவை தங்களுக்கு ஏற்படுத்தும் என்று அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. சங்கத்தின் சொத்துக்களை சூறையாட நினைப்பவர்களின் சதிவேலைதான் என்பது குடியிருப்பவர்களுக்கு தெரிந்துவிட்டது.இந்நிலையில்தான் கேலிச்சித்திரங்களைக் காரணம் காட்டி இவர்களைக் கைது செய்ததற்கு மேற்கு வங்கத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் பேரணி நடத்தியிருக்கிறார்கள். இந்தப் பேரணிக்கு பல்வேறு அமைப்புகள் தரப்பிலிருந்து ஆதரவும் கிடைத்திருக்கிறது. பேராசிரியர் அம்பிகேஷ் மஹாபத்ராவும் இந்தப் பேரணியில் பங்கேற்றார். தனது கைது குறித்துப் பேசிய அவர், தனிமனித சுதந்திரம் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளது. நகைச்சுவை குற்றச்செயலாக ஆட்சியாளர்களால் பார்க்கப்படுகிறது. காவல்துறையினரால் கைது செய்யப்படுவதற்கு முன்பாக சில குண்டர்களால் நான் தாக்கப்பட்டேன். என் மீது நடவடிக்கை எடுத்த அவர்கள், வன்முறையாளர்களைப் பிடிக்க இதுவரை ஒரு முயற்சியிலும் ஈடுபடவில்லை. எனக்குக் கிடைத்த ஆதரவிலிருந்து நான் மேலும் வலுப்பட்டுள்ளேன் என்று கூறினார்.கடந்த ஆண்டு வரை திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக நின்ற பலரும் தற்போது இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையால் விரக்தியடைந்துள்ளனர். அதில் ஒருவரான தருண் சன்யால் என்ற கல்வியாளர், இத்தகைய மாற்றத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார். பிரபல எழுத்தாளர் மஹாஸ்வேதாதேவி, பிரபலமானவர்கள் பற்றிக் கேலிச்சித்திரம் வரைவது வாடிக்கையான ஒன்றாகும். தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு நானும் காரணம்தான் என்று கோபத்துடன் கூறியிருக்கிறார். மக்களின் எதிர்ப்பைக்கண்டு திரிணாமுல் காங்கிரசின் கூட்டாளியான சோசலிஸ்ட் யுனைட்டி சென்டரும் அரசின் நடவடிக்கையைக் கண்டித்துள்ளது. மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டனர்.
சுரன்

அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்று அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தருண் நஸ்கர் கூறியுள்ளார்.இடதுசாரிக்கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புகள் பேராசிரியர்களுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளன. மக்களின் அதிருப்தி மாநிலம் முழுமையும் பரவும் அபாயம் இருந்ததால்தான் பேராசிரியர் அம்பிகேஷ் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இருந்தாலும் ஜனநாயகத்தைக் குலைக்கும் திரிணாமுல் அரசை எதிர்த்த போராட்டங்கள் தொடரப் போகின்றன. மின்னஞ்சலில் அனுப்பினால் நடவடிக்கை எடுத்தீர்களே... இப்போது எங்கள் மீதும் எடுங்கள் என்று கூறி வீதி, வீதியாக சுவர்களில் கேலிச்சித்திரங்களை வரைந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். 34 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோதும்கூட இடது முன்னணி அரசு இத்தகைய நடவடிக்கை எதிலும் இறங்கியதில்லை என்பதுதான் மக்களிடம் நடைபெற்றுவரும் விவாதத் தின் மையப்புள்ளியாகும்.
---------------------------------------------------------------------------------------------------------------------
திசைதிருப்பும் முயற்சி

எந்தவித குற்றமோ, அசம்பாவிதமோ நடந்தாலும் அதற்குக் காரணம் மார்க்சிஸ்ட் கட்சிதான் என்று குற்றம் சாட்டுவது திரிணாமுல் காங்கிரசின் வழக்கமாகும். தற்போது மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொண்டு போக வேண்டும் என்ற அளவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் உத்தரவு போட்டிருக்கிறது. தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள், மார்க்சிஸ்ட் கட்சியினரோடு நட்பு, உறவு வைத்துக் கொள்ளக்கூடாது, அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்குப் போகக்கூடாது, அவர்களை வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் ஜோதிப்பிரிய மல்லிக் கூறியுள்ளார். பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசைதிருப்பவே இத்தகைய அறிக்கைகள் வெளியாகின்றன என்று கூறுகிறார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
கட்சி உறுப்பினர் சேர்ப்பு முறை. இது திரினாமுல் மாதிரி.

திரிணாமுல் காங்கிரசில் சேர மறுத்த முப்பது வய துக்கு மேலான பெண்ணி டம் அக்கட்சி தொண்டர் கள் முறைதவறி நடந்துள் ளனர். பெண்ணைப் பாலி யல் சீண்டலுக்கு உட்படுத் தியதுடன் அவருடைய உடைகளையும் கிழித்து அரை நிர்வாணமாக வீட் டுக்கு நடக்க வைத்தனர். அவருடைய பருவ மகன், மகள் முன் நடந்த இச்சம்பவத்தால் மனமு டைந்த அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் கானாய்டிகி கிராமத்தைச் சேர்ந்த 38 வயதுப்பெண் காந்தி, சப்டி விஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஞாயிறன்று திரிணா முல் காங்கிரசாரால் அவமா னப்படுத்தப்பட்ட அவர் திங்களன்று (ஏப்ரல் 16) விஷமருந்தினார்.தற்போது இச்செய்திதான் அங்கு பரபரப்பான அரசியல் நிகழ்வாக உள்ளது.

அக்கம் பக்கத்தவரால் அவர் மருத் துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.தன்னையும் தன் குடும் பத்தாரையும் திரிணாமுல் லில் சேரும்படி கட்டாயப் படுத்தி வந்தனர். திரிணா முல் கூட்டத்துக்கு கிரா மத்து பெண்களை அழைத் துவர வேண்டுமென்று வற் புறுத்தினர். தான் மறுத்து விடவே தன்னையும் குடும் பத்தினரையும் அடித்து உதைத்த திரிணாமுல் கட் சியினர் தன் உடைகளைக் கிழித்துவிட்டதாகவும் அப்பெண் கூறினார்.அவரின் மகன் மாரிஷ் டா காவல் நிலையத்தில் 21 நபர்கள் மீது புகார் செய் துள்ளார். காவல்துறை செய லற்று நிற்பதாகவும் அப்பெண் ணின் மகன் கூறினார். திரி ணாமுல் குண்டர்களுக்குப் பயந்து தந்தை தலைமறை வாகிவிட்டதாகவும் அவர் சொன்னார்.38 வயதான பெண் மருத் துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறினர். புகார் பதிவு செய் யப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் மூன்று அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சுகேஷ் ஜெயின் கூறினார்.மருத்துவமனையைச் சுற்றி காவல்துறை வேலி போட்டு அந்நியர்கள் செல் வதைத் தடுத்துள்ளது. பெண் ணின் மகன் டோட் டோன், மகள் ஆகிய இருவரும் வீட் டுக்கு திரும்ப அஞ்சுகின்ற னர். பெண் ணின் கணவர் கேசப்தாஸ் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆவார். சில மாதங்களாக திரிணாமுல் கட்சியினர் மேற்குவங்கத்தில் ஆடும் ஆட்டம் அவர்களை அழிவை நோக்கி அழைத்து சென்று விடும்.
கையில் கிடைத்த ஆட்சி பொறுப்பை அவர்களாகவே போட்டு உடைத்து விடுவார்கள் என்றே தெரிகிறது.
========================================================================
சுரன்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?