நீதி அரசர்?
போக்குவரத்து காவல்துறை மற்றும் சென்னை காவல்துறை ட்விட்டர் பக்கத்தில் இணைத்து பொதுமக்கள் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து புகார் அளித்து வருகின்றனர். இதுபோன்ற புகார்களை உடனுக்குடன் காவல்துறை தரப்பில் விசாரணை செய்து அபராதங்களும் விதிக்கப்பட்டு செலான் புகைப்படத்தை சென்னை காவல்துறை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறது. காவல்துறை ஏடிஜிபி, அரசியல் பிரமுகர் என யாராக இருந்தாலும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களை பாரபட்சம் இன்றி சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக காவல்துறையினர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும்போது பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்ததன் அடிப்படையில், போலீசார் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கடந்த இரு தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் நேற்று (டிச.29) மதியம் அரசு முத்திரையுடன், தேசியக் கொடியுடன் வாகனம் ஒன்று ஒருவழிப்பாதை வழியாக சென்றதை, வாகன ஓட்டி ஒருவர் தனது கார் கேமரா மூலம் ...