ரம்,ரம்,...ஊரடங்கு ஆரம்பம்.
"நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் இன்று(05.01.22) ஆளுநர் சட்டப் பேரவை. கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து பேசும்போது குறிப்பிட்டதாவது:- " நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமமற்ற தளத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன; தொழிற் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றது என்ற அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம். அதேபோல், அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்கல்வி படிப்புகளிலும் ஓ.பி.சி.க்கு 27சதவீத இடஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப்பள்ளியில் படித்து 7.5சதவீத இடஒதுக்கீட்டில் தொழிற்படிப்பு சேரும் மாணவர்களுக்கு அனைத்து கட்டணத்தை அரசே ஏற்கிறது. மேலும், அரசு பள்ளிகளை நவீனப்படுத்த 5 ஆண்டுகளில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். குறிப்பாக, 6,996 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள், கணினி கூடங்கள் அமைக்கப்படும். அதுமட்டுமல்லாது, இன்றைய காலத்துக்கு ஏற்ப பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். தமிழ்நாட்டுக்கென தகவல் தொழில்நுட்ப...