1,500 கோடி ரூபாய் ஊழல் .
நிலக்கரி இறக்குமதியில் மட்டும், ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் அளவுக்கு, ஊழல் நடந்துள்ளது என்றும், இந்தப் பணம், இந்தோனேஷியா வங்கிகளில் குவித்து சேமிக்கப்படுகிறது என்றும், ஒரு தகவலை, மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
தமிழக மின்வாரியத்துக்கு சொந்தமான, அனல் மின் நிலையங்களுக்கு ஆண்டுக்கு, 200 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.
இதில், 140 லட்சம் டன் நிலக்கரி, உள்நாட்டின் கோல் இந்தியாவின் துணை நிறுவனங்கள் மூலம் பெறப் படுகிறது. மீதி,0 லட்சம் டன் நிலக்கரி இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்துவாங்கப்படுகிறது.
அயல்நாடுகளில் நிலக்கரி விலை, 2009ம் ஆண்டில் டன் ஒன்று, 130 அமெரிக்க டாலர்களாக இருந்தது.
ஆனால், 2013ம் ஆண்டில் இருந்து நிலக்கரி விலை வீழ்ச்சி கண்டு, 30 டாலர் முதல் 40 டாலராகஉள்ளது.
இன்சூரன்ஸ் மற்றும் கப்பல் சரக்கு கட்டணம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்தால், ஒரு டன் நிலக்கரியின் இறக்குமதி விலை, 50 டாலர்கள் தான்.
அதாவது, இந்திய மதிப்பில் 3 ஆயிரத்து, 360 ரூபாய்.ஆனால், தமிழக மின்வாரியம், போலி ஆவணங்கள் மூலம், இந்த நிலக்கரியை, 87 டாலருக்கு வாங்குவதாகக் கணக்கு காட்டுகிறது. அதாவது டன் ஒன்று, 3 ஆயிரத்து 360 ரூபாய் விலைக்கு வாங்கப்படும் நிலக்கரியை, 5 ஆயிரத்து 752 ரூபாய்க்கு வாங்குவதாக மோசடியான பொய் கணக்கு காட்டுகிறது.
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி கப்பலில் வரும்போது, இன்வாய்ஸ் எல்லாம் திருத்தி மாற்றப்பட்டு, புது ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, 87 டாலராக அதாவது, 5 ஆயிரத்து 752 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டு, பொய் கணக்கு பதிவு செய்யப்படுகிறது.
இந்த முறைகேடுகள் மூலம், ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.விலை உயர்த்தப்பட்டு, கூடுதலாக வரும் தொகை, அ.தி.மு.க., அமைச்சர்களுக்காக இந்தோனேஷியா வங்கிகளில் சேமிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளதாக, 'எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி' கூறியுள்ளது.
"எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி வெளியிட்டுள்ள இந்த அதிர்ச்சித் தகவலை, தமிழக மின்வாரியமோ, மின்துறை அமைச்சரோ, முதல்வரோ இதுவரை மறுக்கவில்லை.
நிலக்கரி இறக்குமதியில் நடந்த, 1,500 கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தை, மின்வாரியம் இதுவரை ஏன் தக்க ஆதாரங்களுடன் மறுக்கவில்லை?ஊழல் நடந்தது உண்மைதான் என்பதால்தானே?"
என்று கலைஞர் கேள்வி எழுப்பிஉள்ளார்.
=========================================================================================
இன்று,மே-03.
- சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம்
- போலந்து அரசியலமைப்பு தினம்
- ஜப்பான் அரசியலமைப்பு தினம்
- வாஷிங்டன், டிசி நகரமாக்கப்பட்டது(1802)
- முதலாவது கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன(1959)
இன்று உலக ஆஸ்துமா தினம்
ஆஸ்துமாவை கட்டுப்படுத்தி, இறப்பு எண்ணிக்கையை குறைப்பது, வாழ்க்கை தரத்தை உயர்த்துவது ஆஸ்துமா தினத்தின் நோக்கம்.
ஆஸ்துமா என்பது சுவாசக்குழாயை பாதிக்கும் ஒரு அலர்ஜி நோய். சுவாசக்குழாய் என்பது, மூச்சுக்காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் குழாய்கள்.
இந்த நோயாளியின் சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீங்கி, சுருங்கியிருக்கும். வீக்கம் உள்ள சுவாசக்குழாய்க்குள் ஒவ்வாமையை ஏற்படுத்தக்
கூடிய புகை, துாசி செல்லும் போது சுவாசக்குழாய்கள் இப்பொருட் களுக்கு எதிராக செயல்படும்.சுவாசக்குழாய்களுக்கு எதிராக செயல்படும் போது, குழாய்களின் உள்சுற்றளவு குறைந்து, நுரையீரலில் குறைந்தளவு காற்றுப் பரிமாணம் நடக்கும் பகுதிக்குச் செல்கிறது.
சுவாசக்குழாய்கள் சுருங்குவதால் அதன் வழியாக காற்று சென்றுவரும் போது விசில் போன்ற சத்தம் கேட்கிறது.

நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது.
அறிகுறிகள்மூச்சிரைத்தல், இருமல், மார்பு பகுதி இறுக்கமாதல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை நோயின் பொதுவான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் வேறு உடல் நலப் பிரச்னைகளின் போது கூட
ஏற்படலாம். இவை அனைத்தும் இரவு, அதிகாலை நேரங்களில் ஏற்படும்.

எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, நுரையீரல் செயல்திறன் பரிசோதனை மூலம் இந்நோயை கண்டறியலாம். காய்ச்சலை அளவிட தெர்மாமீட்டர் உள்ளது போல், ஆஸ்துமாவிற்கும் பீக்ப்ளோ மீட்டர் என்ற கருவி உள்ளது. இதனை பயன்படுத்தி ஒரு நுரையீரல் எவ்வளவு காற்றை வெளியிடுகிறது என்பதை கண்டறியலாம்.
அலர்ஜனஸ் எனப்படும் ஒவ்வாமை, எரிச்சலுாட்டும் பொருட்கள் மற்றும் வைரஸ் நோய் தொற்று போன்றவை ஆஸ்துமா வருவதற்கான பொதுவான காரணிகள்.
செல்லப் பிராணிகளின் ரோமம், துாசி, துாசியில் உள்ள சிறு பூச்சி, கரப்பான் பூச்சியின் கழிவுகள், மரங்கள் மற்றும் பூக்களின் மகரந்தத் துாள், மேல் பூச்சுப் பொருட்கள், பெயிண்ட், சிகரெட் புகை, காற்றில் உள்ள மாசு, குளிர்ந்த காற்று, வெப்பநிலை மாற்றும், வண்ணப்பூச்சு பொருள் மற்றும் சமைக்கும் போது வரும் புகை, அழுதல், சிரித்தல், ஆஸ்பரின் மற்றும் பீட்டா பிளாக்கர்ஸ் என்படும் மருந்துகள், வயிறு மற்றும் உணவுக்குழாய் பாதிப்பினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஆஸ்துமாவின் பாதிப்புகளை அதிகமாக்கி மோசமான நிலைக்கு கொண்டு செல்லும்.

ரசாயனப் பொருட்கள், நோய் தொற்று, குடும்ப பின்னணி மற்றும் குழந்தைகள் புகையிலையிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதனால் ஆஸ்துமா வரும்.
ஒரு கர்ப்பிணிப் பெண், புகையிலை புகையினை சுவாசிக்க நேரிடும் போது வயிற்றில் வளரும் குழந்தைக்கு எளிதில்
ஆஸ்துமா வருகிறது. உடற்பருமனாகுதல் போன்றவை ஆஸ்துமாவின் பொதுவான காரணிகள். குழந்தைகளுக்கு வரும் ஆஸ்துமா பெரியவர்களுக்கு வருவதிலிருந்து மாறுபட்டது. குழந்தைகளுக்கு மூச்சுதிணறல், வீசிங், இருமல் மற்றும் மார்பு இறுக்கம் ஆகிய அறிகுறிகள் ஏற்படாது.
நாள்பட்ட மற்றும் தொடர் இருமல், வாந்தி வரும் வரை இருமல், இரவில் இருமல், மூச்சிரைப்பு, மூச்சுவிட முடியாமை, விளையாட அல்லது உடற்பயிற்சி செய்ய துவங்கியதும் களைப்படைதல், வழக்கத்தைவிட விரைவாக சுவாசிப்பது, அதிக கோபமடைதல் ஆஸ்துமாவின் ஆரம்ப அறிகுறிகள்.
களைப்பாக இருக்கிறேன்,

இதயம் இறுக்கமாக இருக்கிறது, மூச்சுவிட கடினமாக உள்ளது, மூச்சுவிடும் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கிறது என, குழந்தைகள் கூறினால் மருத்துவரை அணுகுங்கள்.
==========================================================================================
உலக பத்திரிகை சுதந்திர தினம்.
1986 டிச., 17ல், கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா, அவரது அலுவலகம் முன்பாக படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு, உலகளவில் வலுப்பெற்றது.
ஆப்ரிக்கப் பத்திரிகைகள் கூட்டாக, 1991ல், 'பத்திரிகை சுதந்திர சாசனம்' முன்வைத்தன.
இது, ஐ.நா., சபைக் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும், மே 3ம் தேதி, உலக பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு, ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனம், கிலெர்மோ கானோ இசாசா விருது வழங்கி கவுரவிக்கிறது.
முதல் உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்பட்ட நாள் இன்று!