வெள்ளி, 6 மே, 2016

கோடை தாக்குதல் அவசர உதவி எண்தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கோடை வெயில் கொளுத்துகிறது. 
மே-16 தேர்தல் களச்சூட்டொடு ,வழக்கமான கோடைகால வெயிலும் அக்னி நட்சத்திர உதவியுடன்  வறுத்தெடுக்கும் கோடை வெயிலால்  பலருக்கு சில கோடை கால வியாதிகள் வந்து பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறது.மற்ற மாநிலங்களைப் போல் இதுவரை வெயிலால் மரணம் தமிழகத்தில் இல்லை. .
ஆனாலும் ஜெயலலிதா தேர்தல் பரப்புரைக்கு மக்களை நண்பகலில் கூட்டி வந்து அடைத்து வைத்து வெயிலில் நகர விடாமல் காவல் துறையினர் பார்த்துக்கொண்ட கொடுமையால் வெயிலுக்கு இதுவரை 7பேர்கள் பலியாகியுள்ளனர்.
ஆனால் இந்த வெயில் பழியும் கூட அரசு ஆவணங்களில் நோயுடன் ஜெயலலிதா பரப்புரைக்கு வந்து சென்ற பின் உண்டான மரணங்கள் என்று பதிவாகியுள்ளதால் வெயில் கணக்கில் ஆவணங்கள் படி சேராது.
இது போன்ற கத்திரி வெயிலில் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க ஆலோசனை பெற இலவச தொலைபேசி எண் 104  அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
உங்களுக்கு வெயிலில் செல்கையில் கிறக்கம் போன்றவை உண்டானால் உடனே இந்த எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெற்று உய்யலாம். ஏனெனில் பலர் கிறக்க நிலையில் சமாளித்து எழுவதற்குள் மயக்க நிலைக்கு போய்விடும் ஆபத்து அதிகம் உள்ளது.ஆரோக்கியமான உடல் நிலை உள்ளவர்களுக்கு கூட  ஆபத்து உண்டாகும் நிலை உள்ளது.கோடை வெட்டு [சன்ஸ்ற்றொக்]வந்தால் மிகவும் இக்கட்டான நிலையாகி விடும்.
அதற்காகத்தான் சிறிது கிறக்க நிலை வந்தவுடன் சுதாரித்து நிழலில் ஒதுங்கி விடுவதும்.இந்த 104 எண்ணை தொடர்பு கொள்வதும் உங்கள் உயிரையே பாதுக்கக்கும்.
நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் பல மாவட்டங்களிலும் 102 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. 
வெயிலால் ஏற்படும் விபரீதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை அவசியம் என பொதுமக்களை சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 
நடப்பாண்டு கோடை காலத்தில் வழக்கமான வெப்ப நிலையை விட 5 டிகிரி அளவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

எனவே, மக்கள் நண்பகல் 12 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், தாகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும், 

உடலை இறுக்கி பிடிக்காத தளர்வான, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். 
வீட்டில் ஜன்னல் கதவுகளுக்கு திரைச்சீலை அமைத்திருந்தால் பகல் நேரங்களில் அவற்றை மூடிய நிலையிலும் இரவில் விலக்கியும் குளுமையாக இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். 
மது, தேனீர், காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும். 
வயதானவர்கள், குழந்தைகள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 
கோடை வெயிலால் சன் ஸ்ட்ரோக் எனப்படும் உடனடி மயக்க நிலை பலருக்கு ஏற்படும். நடந்து செல்லும் போது லேசாக தலை சுற்றல் ஏற்படும். 
சுதாரிப்பதற்குள் மயக்க நிலைக்கு சென்று விடுவார்கள்.

உடனடியாக அந்த நபரை காற்றோட்டமான இடத்தில் படுக்க வைத்து ஆடைகளை தளர்த்த வேண்டும். உப்பு, சர்க்கரை கரைசல் கலந்த பானத்தை அருந்த கொடுக்க வேண்டும். 

குளிர்ந்த நீர், பழச்சாறும் கொடுக்கலாம். 

108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சை அளிக்க வேண்டும். 
கோடை நேரத்தில் மயக்கம் தவிர அதிக வெப்பத்தால் உடலில் கொப்புளங்கள், தோல் நோய், மஞ்சள் காமாலை, நீர்கடுப்பு போன்றவை ஏற்படலாம். 
பற்றாக்குறையால் கூடுதலாக பிடித்து இருப்பில் வைக்கப்படும் தண்ணீர் பாத்திரங்களை கட்டாயம் மூடி வைக்கவேண்டும்.
 மேலும் நீங்கள்  உங்களுக்காகவும் ,பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்காகவும்  கோடை வெப்ப பாதிப்புகளுக்கு கட்டணமில்லா தொலைபேசியான 1077 மற்றும் 104 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.  
=======================================================================================
இன்று,
மே-06.

========================================================================================
2015-2016ம் ஆண்டில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்காக ரூ.117 கோடி விமானச்செலவு மட்டும் செலவிடப்பட்டுள்ளதாக ஏர்இந்தியா அறிவித்துள்ளது. 
இது முந்தைய ஆண்டை விட 25 சதவீதம் அதிகமாகும். விமானச்செலவு தவிர தங்குமிடம்,உணவு,பாதுகாப்பு,உடன் சென்றொருக்கான  செலவு ரு 210 கோடியை தாண்டுமாம்.
கடந்த ஓராண்டில் மோடி 22 நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார்.
========================================================================================

பாராளுமன்றம் காவி மயமானது.
                                                       இன்று மட்டும் இலவசம்.