இடுகைகள்

கூட்டு மருந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூட்டு மருந்து, கெட்ட மருந்து?

படம்
இன்றுவரை மருந்துக்கடைகளில் புழக்கத்தில் இருந்த 340 கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு  தடை விதித்துள்ளது., இவைகளில் பல கூட்டு மருந்துகள் ஆபத்தை விளைவிப்பவை.அவை உலக நாடுகள் பல வற்றில் ஏற்கனவே தடையில்தான் உள்ளது.இதுவரை இவைகளை கண்டும்,காணாமல் இருந்த மத்திய அரசு திடீரென வேறு பல கூட்டு மருந்துக்களையும் சேர்த்து தடை விதித்துள்ளது.மருந்து விற்பனையாளர்கள்-தயாரிப்பாளர்களிடையே எதிப்பை கிளப்பியிருக்கிறது. குறிப்பிட்ட விகிதத்தில் சிலவகை மருந்துப் பொருட்கள் சேர்க்கப்பட்டு, கூட்டு மருந்து- மாத்திரைகளாக விற்கப்படுகின்றன.  இவற்றில் பல, அவை தயாரிக்கும் நிறுவனங்களால் விளம்பரப்படுத்தப்பட்டு நன்கு மனதில் பதிந்துவிட்ட பிராண்டு பெயர்களால் ஆனவை. குறிப்பாக விக்ஸ் ஆக் சன் 500.இது பக்க விளைவுகள் உண்டாக்கும் என்று தெறிந்தும் இதுவரை சும்மா இருந்த அரசு  திடீர் தடையை தந்துள்ளது.இம்மாத்திரைகளுக்கு விக்ஸ் தயாரிப்பு நிறுவனம் செய்த விளம்பரம் அதிகம். ஜலதோஷமா இதைச் சாப்பிடு, உடல் வலியா இந்த மாத்திரையை எடுத்துக்கொள், குளிர்க் காய்ச்சலா இதுதான் நிவாரணி என்ற அளவுக்கு இவை பிரபலமாகிவிட்டன.  ஆனா...