"பல்" லைக் காட்டும் பத்து செய்திகள்.
மரபணுக்கும், பற்கள் நோய்களுக்கும் தொடர்பு? நேரடியாக பற்சிதைவு, வாய்ப்புண், பற்களில் இரத்தம் வடிதலுக்கு தொடர்பில்லை. ஆனால் 32க்கும் குறைவான எண்ணிக்கையில் பற்கள் முளைத்தல், பற்களை தாங்கி நிற்கும் எலும்புகளில் உறுதியின்மை, பற்களின் வரிசை கோணலாக இருத்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, மரபணு குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம். பற்சிதைவுக்கு பல் நீக்குவது? பற்சிதைவு என்பது ஒரு காயம் மாதிரி! அதனால், முழுமையாக பற்களை அகற்றாமல் பற்களுக்கான வேர் சிகிச்சை மூலம் நோய்த்தொற்றுக்களை மட்டும் அகற்றி விட்டு, பற்களை பாதுகாக்கலாம். ஆனாலும், முழுமையாக சிதைந்துவிட்ட பற்களை அகற்றித்தான் ஆக வேண்டும். பற்களில் உணவுத்துகள்கள் தங்கிவிடாமல் பார்த்துக்கொண்டாலே, பற்சிதைவு ஏற்படாது. பால் பற்கள் முளைப்பது? நிச்சயமாக! பால்பற்கள் விழுந்த பிறகு முளைக்கும் பற்கள் சற்று பெரியதாக முளைக்கும். அந்த சமயத்தில் தேவைப்படும் இடவசதியை ஈடுசெய்யவே, பால்பற்கள் இடைவெளியோடு முளைக்கின்றன. இடைவெளி இல்லாமல் பால் பற்கள் முளைத்து விட்டால், புதிய பற்கள் இடுக்க...