கார்ல் மார்க்ஸ்
மே- 5 . 'காரல் மார்க்ஸி'ன் 198-வது பிறந்த நாள் எல்லாக் காலங்களுக்கும் நிலைத்திருக்கின்ற பெரும் புகழ்மிக்க, அருஞ்செயல்கள் புரிந்த மாபெரும் மனிதர்களுக்கு மத்தியில் பாட்டாளி வர்க்கத்தின் மிகச்சிறப்பான தத்துவ ஆசிரியரும் தலைவருமான கார்ல் மார்க்ஸ் தனிச்சிறப்பான இடத்தை வகிக்கிறார். இயற்கை, சமூகம் மற்றும் மனித சிந்தனையின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்ற பொது விதிகளைப் பற்றி இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற போதனையைப் படைத்து அதன் மூலம் உலகத்தை இன்னும் சிறப்பான முறையில் அறிந்து கொள்வதுடன், அதைப் புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்கும் வழி காட்டியதனால் மார்க்ஸ் வரலாற்றுக்கு மிகப்பெரும் சேவை செய்திருக்கிறார். முதலாளித்துவத்தின் வீழ்ச்சியும் கம்யூனிஸ்ட் சமூகத்தின் வெற்றியும் தவிர்க்க முடியாதவை என்று விஞ்ஞான ரீதியாக நிரூபித்துக் காட்டியதன் மூலம், மனித குலத்துக்கு இன்னும் சிறப்புமிக்க எதிர்காலத்தைப் பற்றி அதுவரையிலும் தெளிவில்லாத கனவாக மட்டுமே இருந்த சோஷலிசத்தை மார்க்ஸ் ஒரு விஞ்ஞானமாக மாற்றியமைத்தார். மார்க்ஸ் தன்னுடைய நண்பரான பிரடெரிக் ஏங்கல்சுடன் இணைந்து பாட...