வாக்களிக்கத்தெரியாதவர்களா? நம் அரசியல்வாதிகள். முன்னாள் முதல்வர்கள். முலாயம் முதல் முறை வாக்களித்தது தவறு என்பது சும்மா பொய்.அவர் வேண்டும் என்றேதான் தனது வாக்கு செல்லாமல் போக வேண்டும் என்று இவ்வாறு செய்திருக்கிறார்.தனது வாக்கு யாருக்கு எனத்தெரிந்தும் தவறாக வாக்களிக்க காரணம் என்னவாயிருக்கும்/ தன்மீதான சிபிஐ குற்ற சாட்டுக்குப்பயந்தேதான் பிரணாப்புக்கு வாக்களிக்க முலாயமும்,மாயாவதியும் முன் வந்தார்கள். ஆனால் உள்மனதில் வேறு திட்டத்துடன்தான் தனது வாக்கு தவறியதாக குழப்பியுள்ளார்.இதன் மூலம் தனது வாக்கு செல்லாமல் போய் விடும் என்பது தெரியாதவர் அல்லமுலாயம். இது வாக்களித்த மாதிரியும் ஆயிற்று,அளிக்காதது மாதிரியுமாயிற்று, வரும் ஆனா வராது கதைதான். நம்ம அரசியல்வாதிகள் திறமையானவர்கள்தான். ஆனால் அவை உள்ளடி திறமையாக இருப்பதுதான் மோசம். _________________________________________________________________________________ மான பங்கம். அசாமில் ஒரு இளம் பெண் மானபங்கம் செய்யப்பட்டதை படம் பிடித்து அதை ஒளி பரப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் தொலைக்காட்சி நிருபர் கவ...