இடுகைகள்

கக்கன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கக்கன் தினமின்று!

படம்
பரிசுத்தமான மனிதர் கக்கன்.  பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட வர். கக்கன் ஜூன் 18, 1908 ல்,    மதராஸ் ராசதானியாக   தமிழகம்   இருந்தபொழுது   மதுரை   மாவட்ட,   மேலூர் தாலுகாவிலுள்ள   தும்பைபட்டி   கிராமத்தில் ஒரு   தலித்   குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர்   பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) பணிபுரிந்தவர். தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் மேல்நிலைப் படிப்பிற்காக   திருமங்கலம்   வந்து அங்கே ஓர் அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்தார்.   சத்தியமூர்த்தி காமராஜரை தழுவிக் கொண்டதுபோல், மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில்...