ஏழைகளே இல்லை.

மன்மோகன் சிங் வாயை திறந்து பேசுவதில்லை. பேச ஆரம்பித்தால் பொய். பொய்யைத்தவிர வேறில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கை தலைவராகவும், மான்டேக் சிங் அலுவாலியாவை துணைத் தலைவராகவும் கொண்ட மத்திய திட்டக்கமிஷன், நேற்று முன்தினம், புள்ளிவிவர அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், நாட்டில் ஏழைகள் எண்ணிக்கை குறைந்து விட்டத. மக்களின் வருமானம் அதிகரித்து விட்டது என புள்ளிவிவரங்கள் இடம்பெற்றிருந்தன. மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகள் நூற்றுக்கு பதினோரு பேர் மட்டும்தான். கிராமத்தில் ஏழைகள் விகிதம் நூற்றுக்கு 15 பேர் என்றால், நகரத்தில் 7 பேர்தான் ஏழைகள்! டெண்டுல்கர் கணிப்புமுறையில், 2004-05-ஆம் ஆண்டில் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்த ஏழைகள் எண்ணிக்கை 40 கோடி. 2011-12-ஆம் நிதியாண்டில் ஏழைகள் எண்ணிக்கை 27 கோடியாகக் குறைந்துவிட்டது; அதாவது 13 கோடி பேர் வறுமைக் கோட்டை தாண்டிக் குதித்துவிட்டார்கள்! இந்தக் கணிப்புமுறையில், ஐந்து நபர்கள் உள்ள ஒரு குடும்பம், நகர்ப்புறத்தில்மாதம் தலா ரூ.1,...