இடுகைகள்

கொய்யா. லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொய்யா இலை தேநீர்.

படம்
கொய்யாப்பழம் நமது நாட்டின் பாரம்பரிய கனி வகைகளில் குறிப்பிடத்தக்கது.   நமது நாட்டின் உணவு பழக்க வழக்கங்கள் என்பது ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற  அடிப்படையில் ஆனதுதான்.  அதை விட்டு விலகி நாம் மேல்நாட்டு உணவு வகைகளின் மீதும், ஆயத்த உணவுகளின் மீதும் கொண்ட நாட்டம்தான்  இன்று உலகளவில் சர்க்கரை நோயாளிகளை அதிகளவில் கொண்ட தேசமாக நாம் விளங்குகிறோம். அந்த வகையில் கனி வகைகளில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் கொய்யாப்பழம், பழம் மட்டும் இன்றி அதன் இலைகளும் மருத்துவ குணம்  வாய்ந்தவையே.  இந்த மரத்தின் இளம் இலைகள் வெப்பமண்டல நாடுகளில் பராம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது.  இந்த இலையின்  மருத்துவ பலன்களான ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களான வைட்டமின் சி, மற்றும் க்யூயர்சிடின், ஃபிளாவனாய்டுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.   கொய்யா இலைகளை நன்கு கழுகி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று அருந்தினால் கொழுப்பைக் குறைக்கும், நீரிழிவை தடுக்கும், மேலும்  வயிற்றுப்போக்கினால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும். பாக்டீரி...