தடம் பதியா தேடல் !
இணையத்தில் தேடுகையில் நம் தேடல்கள் பதிவு செய்யப்படாமல் இருக்க, அனைத்து பிரவுசர்களும் “தனித்தேடல் வழியினைக்” கொண்டுள்ளன. இந்த தேடல் நிலையில், நம் தேடல்கள் குறித்த தகவல்கள் பதியப்படுவதில்லை என்பதால், இந்த “தேடல் பதியாத பிரவுசிங் நிலை” என்று அழைக்கப்படுகிறது. இது Private Browsing (Firefox மற்றும் Safari) மற்றும் Incognito Mode (Chrome) என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும், இந்த வழியினை பாலியியல் தளங்களைப் பார்ப்பவர்கள், தாங்கள் இத்தகைய தளங்களைப் பார்ப்பதனை மற்றவர்கள் அறிந்து கொள்ளாமல் இருக்க, இந்த தனிநபர் முகமூடியைப் பயன்படுத்துகின்றனர். இதனைப் பயன்படுத்துகையில், தற்காலிக பிரவுசர் நேரம் கிடைக்கிறது. இந்த நேரத்தில், எந்த குக்கிகள் பைலும் பிரவுசரால் பதிவு செய்யப்பட மாட்டாது. இந்த தேடல் சார்ந்த டேட்டா அனைத்தும், தேடல் காலம் முடிந்தவுடன் அழிக்கப்பட்டுவிடும். இதனால், Private Mode / Incognito Browsing என்றாலே பேசத் தயங்குகின்றனர். ஆனால், இந்த வழி இன்னும் சில நல்ல பயன்பாட்டிற்கும் உதவுகிறது. அவற்றை இங்கு பார்க்கலாம். பெரும்பாலான இணைய தளங்கள், ஒரே ஓர் அக்கவுண்ட...