இடுகைகள்

சுங்கச்சாவடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வழிப்பறிச் சாவடிகள்

படம்
நாடு முழுவதும் உள்ள386 சுங்கச் சாவடிகளில்75 விழுக்காடு தனியாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன.  இந்த தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை மேம்பாடு, பராமரிப்பு, கட்டண வசூலிப்பு என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்கிறது.  அதன் அடிப்படையில்கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகின்றன.  ஆனால் இந்த ஒப்பந்தப்படிதான் தனியார் நிறுவனங்கள் செயல்படுகிறதா?  போட்ட முதலீட்டை லாபத்துடன் எடுப்பதற்கான காலக்கெடுஎன்ன?  எப்போது நாட்டிற்குஅந்த சாலைகள் அர்ப்பணிக்கப்படும் என்ற எந்தவரைமுறையும் இல்லை. சுங்கச்சாவடியை முறையாக கண்காணிக்கவும் எந்த ஏற்பாடும் இல்லை. ஆனால் தனியார்கார்ப்பரேட்கள் அளிக்கும் கணக்கை மட்டும் ஏற்றுக் கொள்ளும்நடைமுறையே இன்றும் இருக்கிறது.தனியார் நிறுவனங்கள் எப்போதும் லாப நோக்கில் மட்டுமே செயல்படும்.  காரணம் தனியாருக்கு சுங்கம் வசூலிப்பது என்பதுஒரு தொழில்தான். ஒரு தொழிலில் தனியார் நிறுவனங்கள் எப்போதும் அதிகபட்ச லாபத்தையே குறிக்கோளாக கொண்டிருக்கும்.  இது உலகளவிலான நிதி மூலதனத்தின் அடிப்படை விதி ஆகும். அப்படிய...