வழிப்பறிச் சாவடிகள்

நாடு முழுவதும் உள்ள386 சுங்கச் சாவடிகளில்75 விழுக்காடு தனியாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. 

இந்த தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை மேம்பாடு, பராமரிப்பு, கட்டண வசூலிப்பு என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்கிறது. 

அதன் அடிப்படையில்கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகின்றன. 

ஆனால் இந்த ஒப்பந்தப்படிதான் தனியார் நிறுவனங்கள் செயல்படுகிறதா? 

போட்ட முதலீட்டை லாபத்துடன் எடுப்பதற்கான காலக்கெடுஎன்ன? 

எப்போது நாட்டிற்குஅந்த சாலைகள் அர்ப்பணிக்கப்படும் என்ற எந்தவரைமுறையும் இல்லை. சுங்கச்சாவடியை முறையாக கண்காணிக்கவும் எந்த ஏற்பாடும் இல்லை.

ஆனால் தனியார்கார்ப்பரேட்கள் அளிக்கும் கணக்கை மட்டும் ஏற்றுக் கொள்ளும்நடைமுறையே இன்றும் இருக்கிறது.தனியார் நிறுவனங்கள் எப்போதும் லாப நோக்கில் மட்டுமே செயல்படும். 

காரணம் தனியாருக்கு சுங்கம் வசூலிப்பது என்பதுஒரு தொழில்தான். ஒரு தொழிலில் தனியார் நிறுவனங்கள் எப்போதும் அதிகபட்ச லாபத்தையே குறிக்கோளாக கொண்டிருக்கும். 

இது உலகளவிலான நிதி மூலதனத்தின் அடிப்படை விதி ஆகும். அப்படியிருக்கையில் தனியார் நிறுவனங்கள் சேவைத்துறையில் எந்த அடிப்படையில் அரசு அனுமதிக்கிறது.

டோல் வசூலிப்பதில் மட்டுமல்ல, பராமரிப்புப் பணிகளில் கூட கண்காணிப்பு இல்லை என்பதுதான் கண் கூடான உண்மையாக இருக்கிறது. 
பல இடங்களில் பெயர் என்னவோ தேசிய நெடுஞ்சாலை, ஆனால்உண்மையில் உயிர்களை காவு வாங்கும் சாலைகளாகவே இருக்கின்றன. 

உரிமை காலம் நீட்டிப்பு ஏன் 1992ஆம் ஆண்டு ஒப்பந்த விதிப்படி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம்தேதியும், 2008ஆம்ஆண்டு விதிப்படி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதியும் கட்டணம் திருத்தி அமைக்கப்படுகிறது. 

அப்படி கட்டணம் நிர்ணயிக்கப்படும் போது, சுங்கக்கட்டணம்வசூலிக்கும் தனியார்நிறுவனங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட முதலீடுஎடுக்கப்பட்ட பிறகு பராமரிப்பிற்காக 40 விழுக்காடு கட்டணம்மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.ஆனால் என்ன நடக்கிறது. 

அனைத்து சுங்க சாவடிகளிலும் ஏற்கெனவே வசூலித்து வந்தகட்டணத்தை விட கூடுதலாகவே நிர்ணயம் செய்யப்படுகிறது. 

முதலீடு எடுத்த பின்பு 40 விழுக்காடு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விதியின்படி ஏற்கெனவே வசூலித்த வந்த கட்டணத்தில் இருந்து 60 சதவிகிதம் குறைத்துத்தானே வசூலிக்க வேண்டும். 
எப்படி கூட்டி வசூலிக்கப்படுகிறது. 

5ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அனைத்து நெடுஞ்சாலைகளிலும் போட்ட முதலீடு எடுக்கப்பட்டுவிட்டது. 

ஆனால் வருவாயை குறைத்துக் காட்டிகூட்டுக் கொள்ளை நடைபெறுகிறது. 

இந்த நிலையிலும் 2007ம் ஆண்டிற்கு முன்பு வரை சாலை அமைத்த கட்டணம் வசூலிக்க எல்லா வரவு-செலவுகளையும் கணக்கிட்டு 6 ஆண்டுகள் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று இருந்தது. 

ஆனால் 2007ல் ஒரு சட்டத்தின் மூலம் 6 ஆண்டுகள் வசூலிக்கலாம் என்று இருந்ததை 25 ஆண்டுகள்என்றுதிருத்தி அமைக்கப்பட்டது. 

இதுஎந்த அடிப்படையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டது என்பது இன்று வரை பரமரகசியமாகவே இருக்கிறது.
வழிப்பறி: சுங்கச்சாவடிகளும் தடுக்க வக்கற்ற அரசுகளும் பிரசுரத்திலிருந்து.
=======================================================================================
இன்று,
மே-19.
  • கனடாவின் மொன்ட்றியல் நகரம் அமைக்கப்பட்டது(1604)
  • சோவியத் ஒன்றியம், மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது(1971)
  • இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது(1649)

========================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?