ஏழைத்தாய் மற்றும் விவசாயி மகன்கள்.
வெ ங்காய விலை, உரிக்காமலேயே கண்களில் நீரை வரவழைக்கும் அளவிற்குத் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனையொட்டி விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் வெங்காய ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் விநியோகத்தில் துரிதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றன. கடந்த செப்டெம்பர் மாதத்திலேயே சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்தை ஒட்டி, வெங்காயத்திற்கான ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது மத்திய அரசு. மத்திய அரசு தெற்காசிய நாடுகளில் இருந்து வெங்காய இறக்குமதிக்கு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. பல மாநிலங்களில் தேர்தல்கள் அடுத்தடுத்து வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தலில் தனது ஓட்டுக்களை எப்படியாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, வெங்காய இறக்குமதியில் நுகர்வோர் பாதுகாப்புக்காக இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளையும் தளர்த்தி உள்ளது. குறிப்பாக வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் போது, அவ்வெங்காயத்தில் பூச்சிக்கொல்லி மருந்து நீக்கச் சான்றிதழை அவசியம் பெற வேண்டும் என்...