எந்த விதிப்படி... இப்படி........

கொரோனாவால் கொடிகட்டிப் பறக்கும் பல்தேசிய பெரு நிறுவனங்கள்

தவிர உலகின் ஏழு பெரும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், கொரோனா தொற்று நெருக்கடியல் 12 பில்லியன் டொலர்கள் அதிகரித்த இலாபம் ஈட்டும் எனக் கூறப்படுகிறது. பங்கு சந்தையை ஆக்கிரமித்துள்ள 100 பெரிய நிறுவனங்கள் சந்தையில் 3 ரில்லியன் டொலர்களை அதிகமாக முதலிட்டுள்ளன.

இந்த நிறுவனங்களில் பெரும்பாலனவற்றிற்கு ஐரோப்பிய அரசுகள் கோரானா வைரஸ் நிவாரண நிதியை வழங்கி வருகின்றன. ஜேர்மனிய அரசு பல பில்லியன் யூரோக்களை பீ.எம்.டபிள்யூ கார் நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கான ஊதியத் தொகையை வழங்க, அதன் மறுபக்கத்தில் நிறுவனத்தின் பங்குதாரர்கள் 1.6 பில்லியன் யூரோக்களை இலாபத் தொகையாக பகிர்ந்துள்ளனர்.

பொது முடக்கம் அறிவிக்கப்படும் போதெல்லாம் பெரும் நிறுவனங்களின் இலாபத் தொகை கணக்கிடப்படுகின்றது. அதன் மறுபக்கத்தில் உழைக்கும் மக்களின் நாளாந்த வாழ்க்கை கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றது. மக்களை நோய்த்தொற்றைக் காரணமாக முன்வைத்து வீடுகளுக்குள் முடக்கி வைத்திருக்கும் அரசுகள் அவற்றின் பங்களார்களான பல் தேசிய நிறுவனங்களின் கொள்ளைக்குத் துணை போகின்றன.

----------------------------------------------

உ.பி.  யோகியின் (அ)சிங்க ஆட்சி

உத்திரப் பிரதேசம், ஹத்ராஸ் கிராமத்தில் 19 வயது தலித் இளம்பெண் கொடூரமாக வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டது, இந்தியாவெங்கும் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியிருக்கிறது. அதே நேரத்தில் மாநில அளவிலோ, இல்லை அந்த குற்றம் நடந்த பகுதி அளவிலோ நிலைமை வேறாக இருக்கிறது. அங்கே தாக்கூர் சாதியைச் சேர்ந்த அந்த நான்கு கொலைகாரர்களை பாதுகாக்கும் முழக்கம் ஓங்கிக் கேட்கிறது.

இரவோடிரவாக எரிக்கப்பட்ட தலித் இளம்பெண்ணின் சடலம்! குற்றத்தை மறைக்க முனையும் போலீசு!

அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை அனைத்தும் ஆதிக்க சாதிகளால் நிரம்பி வழியும் நிலையில் அவற்றை ஆதிரிக்கும் ஆதித்யநாத் பாஜக அரசு இருக்கும் வரையில் நீதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியல்ல. ஒரு போதும் கிடைக்காது என்பதுதான் உண்மை. பாபர் மசூதி இடிப்பு வழக்கில்  சி.பி.ஐ சாட்சியங்கள் ஏதுமில்லை என்று சிறப்பு நீதிமன்றம் பாஜக குற்றவாளிகளை விடுவித்தது சமீபத்திய சான்று. அதே சி.பி.ஐ.யை விசாரிக்குமாறு ஆதித்யநாத் அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. வழக்கையும் கையளித்து விட்டது.

இது நடந்து ஒரு நாளில் ஹாத்ராசின் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.வின் தலைமையில் ஆதிக்க சாதியினர் கொலைகாரர்கள் நால்வரையும் ஆதரித்து ஒரு கூட்டத்தையே அங்கே நடத்தியிருக்கின்றனர். இதற்கு போலீசு பாதுகாப்பு வேறு. மாறாக அந்த கிராமத்தில் தனது மகளை பறிகொடுத்த அந்த ஏழை தலித் பெற்றோரை பார்க்க வருவோரை போலீசு அடித்து விரட்டுகிறது. ஆனானப்பட்ட ராகுல் காந்தியையே பிடித்து தள்ளியிருக்கிறது. மற்ற எதிர்க்கட்சியினருக்கும் அதுவே நிலைமை.

முன்னாள் பாஜக எம்.எல்.ஏவானா ரஜ்வீர் சிங் பெஹெல்வன்தான் அந்த பகுதியின் முக்கியமான பாஜக பிரமுகர். அவர் நடத்திய அந்தக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கூடியிருக்கின்றனர். கொலைகாரர்கள் நால்வருக்கும் நீதி வேண்டும் என்று அவர்கள் அங்கே முழக்கமென கூவியிருக்கின்றனர். நாக்கை அறுத்து முதுகெலும்பை உடைத்து ஒரு இளம்பெண்ணை கொடூராமக கொன்று விட்டு இப்படி குற்றவாளிகளை பாதுகாக்கும் செயல் என்பது இந்தியாவன்றி வேறு எந்த நாட்டில் நடக்கும்?

பாஜக-வின் முன்னாள் எம்.எல்.ஏ இப்படி குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறிவிட்டு அரசின் சி.பி.ஐ விசாரணையை வேறு வரவேற்றியிருக்கிறார். சி.பி.ஐ. தனது அரசின் எடுபிடி என்பதில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. மேலும் உண்மை அறியும் சோதனையை குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், போலீசார் அனைவருக்கும் நடத்த வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். ‘உண்மை’ என்பது அங்கே ஆதிக்க சாதி குற்றங்களுக்கு தலைமை வகிக்கும் பாஜகவின் சட்டைப் பையில் இருக்கும் போது எந்த சோதனை நடத்தி என்ன பயன்?

கொலைகாரர்களான சந்தீப் (20), ரவி (35), லவ் குஷ் (23), ராமு (26) ஆகியோர் நால்வரும் அப்பாவிகள் என்று நெஞ்சறிய பொய் சொல்கிறது தாக்கூர் தாதி ஆதிக்க வெறிக் கூட்டம். இவர்களை ஆதரித்து அந்த வட்டாரங்களில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. ஒரு புறம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திப்பதற்கும், அதற்கு நீதி கேட்டும் எதிர்க்கட்சியினரும், ஜனநாயக சக்திகளும் போராடும் வேளையில் அதை கலைக்கும் போலீசு, ஆதிக்க சாதியினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு மட்டும் பொறுப்பாக பாதுகாப்பு கொடுக்கிறது.

இளம்பெண்ணை பறிகொடுத்த பெற்றோரை பீம் சேனாவின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் சந்தித்திருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் எப்படியாவது தங்களை அந்த கிராமத்திலிருந்து அழைத்துச் செல்லுமாறு அவரிடம் மன்றாடியிருக்கின்றனர். அவரும் அப்படி முயற்சித்தாலும் போலீசும், அதிகார வர்க்கமும் அதை தடுத்து நிறுத்தி விட்டது. அந்தக் குடும்பத்தை வெளியேற அனுமதித்து விட்டால் குற்றத்தை குழி தோண்டி மூடி மறைக்க முடியாது அல்லவா?

பாஜக-விற்கு ஆதரவான கங்கனா ராவத் எனும் பெண் நடிகருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கும் போது அந்த தலித் குடும்பத்திற்கு ஏன் எந்த பாதுகாப்புமில்லை என்று  கேள்வி கேட்கிறார் ஆசாத். மேலும் அந்த பகுதியில் ஆதிக்க சாதிகளின் மகா பஞ்சாயத்து எனப்படும் கிராமக் கூட்டங்கள் ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டர்களுக்கும் நடக்கிறது என்கிறார் ஆசாத். சிபிஐ விசாரணை என்பது ஒரு கண்துடைப்பு என்று கூறும் ஆசாத் அதற்கு பதில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அதுவும் தங்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவரைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்கிறார்.

அலிகார் முசுலீம் பல்கலையைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில்தான் அந்த இளம்பெண் இரண்டு வாரம் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி மரித்தும் போனார். அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியான அசீம் மாலிக், “ அந்த பெண் வல்லுறவு செய்யப்படவில்லை என்று உத்திரப்பிரதேச போலீசு கூறுவதில் எந்த உண்மையும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

ஏனெனில் வன்புணர்வு நடந்திருக்கிறதா என்பதற்கான தடவியல் மாதிரிகள் 11 நாட்கள் கழித்தே சேகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசு வழிகாட்டுதலின் படி தடயவியல் ஆதாரங்கள் சம்பவம் நடந்து 96 மணி நேரத்திற்குள் சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார் அந்த தலைமை மருத்துவர்.

இந்த உண்மையை வெளிப்படுத்தியதற்காக இந்த மருத்துவரை உ.பி. பாஜக அரசு எப்படி பந்தாடப் போகிறதோ தெரியவில்லை. நான்கு தாக்கூர் சாதி கொலைகாரர்களால் அந்தப் பெண் சிதைக்கப்பட்ட தேதி செப்டம்பர் 14. மருத்துவமனையில் அந்தப் பெண் நினைவு வந்து ஒரு மாஜிஸ்ட்ரேட் முன் வாக்குமூலம் கொடுத்த தேதி செப்டம்பர் 22. அதன் பிறகே குற்றப்பத்திரிகையில் போலீசு வன்புணர்வு பிரிவை சேர்க்கிறது. ஒரு வாரம் அந்தப்பெண் வாய் திறப்பதற்கு முன் அது வன்புணர்வு இல்லை என்று போலீசு நம்பியிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். இவ்வளவிற்கும் அந்தப் பெண்ணின் தாயும், சகோதரனும் நடந்தவற்றை விரிவாக கூறியிருக்கின்றனர். அந்தப் பெண்ணின் வாக்குமூலத்திற்கு பிறகு 11 நாட்கள் கழித்தே மாதிரிகள் தடயவியல் அறிவியல் சோதனைக்கூடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த சோதனைக்கூட அறிக்கையின் படியே போலீசு வன்புணர்வு நடக்கவில்லை என்று கூறுகிறது.

ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் தங்குமிட மருத்துவர் சங்கத் தலைவரான மருத்துவர் ஹம்சா மாலிக், தடயவியல் சோதனைக்கூடத்தின் அறிக்கை நம்பகமானது இல்லை என்கிறார். 11 நாட்கள் கழித்து எப்படி மாதிரிகளை எடுக்க முடியும் என்று கேட்கும் அவர், ஆணின் விந்து அணுக்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு அழிந்து விடும் என்கிறார்.

ஊடக வெளிச்சம் அந்த கிராமத்தை விட்டு வெளியேறிய பிறகு தங்களுக்கு என்ன நடக்கும் என்ற அச்சத்தில் அந்த தலித் பெண்ணின் குடும்பத்தினர் மட்டுமல்ல மற்ற தலித் குடும்பங்களும் பெரும் பயத்தில் தவிக்கின்றனர். அந்த கிராமத்தை  விட்டு வெளியேற விரும்புகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் கூற வருவோருக்கு ஆயிரத்தெட்டு தடை.

தமிழ்நாட்டு பாஜக கும்பலின் சுவரொட்டி!

இப்படி இருக்கையில் தமிழ்நாடு பாஜக கும்பல் வெளியிட்டிருக்கும் ஒரு சுவரொட்டியைப் பாருங்கள்! “உத்திரப் பிரதேசத்தின் மாநிலத்தில் காங்கிரசு மற்றும் கம்யூனிஸ்டு கயவர்களால் கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண் செல்வி.மனிஷாவிற்கு கண்ணீர் அஞ்சலி” என்று வெளியிட்டிருக்கிறார்கள்.

உ.பி.யில் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறார்கள்! தமிழகத்தில் காங்கிரசாரும், கம்யூனிஸ்டுகளும்தான் குற்றவாளிகள் என்கின்றனர்! கோயாபல்ஸே வெட்கித் தலைகுனியும் இந்த புளுகுணித்தனத்தை செய்யும் கட்சிதான் இந்தியாவை ஆள்கிறது! பாசிசம் நமது வீட்டுக் கதவை தட்டவில்லை, உள்ளேயே நுழைந்து விட்டது, என்ன செய்யப் போகிறோம்?

– வரதன்

--------------------------------------------------

ஓ.பன்னீர்செல்வம்( துணை முதல்வர்,தமிழ்நாடு)

சொத்து மதிப்பு ரூ2000 கோடிகள்.

தேநீர்க்கடையில் இவ்வளவு வருமானமா?

மலையாள இதழில் வந்த செய்தி

-------------------------------------------------

எதுவும் செய்யும் சங்கிகள்

கோபி அருகே கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜகுரு. இவர் இந்து அதிரடிப்படையின் மாநில பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். சுய விளம்பரம் தேடி அரசியலில் பிரபலமடையும் இந்துத்வ கும்பலைச் சேர்ந்தவர் ராஜகுரு.

இவர் கடந்த 1ம் தேதி இரவு 4 பேர் தன்னை கொலை செய்வதற்காக கத்தியுடன் துரத்தி வந்ததாகவும், அவர்களிடம் இருந்து தப்பிக்க வாய்க்காலில் குதித்து கரையேறி தப்பி விட்டதாகவும், தன்னை கொலை செய்யமுடியாத ஆத்திரத்தில் அந்த கும்பல் தன்னுடைய இருசக்கர வாகனத்தை எரித்துவிட்டுச் சென்றதாகவும் கோபி போலிஸாரிடம் புகார் மனு அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜகுருவை யாரும் துரத்திவரவில்லை என்பதையும், தன்னுடையே இருசக்கர வாகத்திற்கு தானே தீ வைத்து எரித்துவிட்டு நாடகமாடியதையும் போலிஸார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து ராஜகுருவை கைது செய்த போலிஸார், அவரிடம் விசாரணை நடத்தியதில் தான் விளம்பரத்திற்காக நாடகமாடியதாக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி சிவகுமார் கூறுகையில், “சம்பவம் நடைபெற்ற அன்று, ராஜகுரு தனது இருசக்கர வாகனத்தை எரித்துக் கொண்டிருந்தபோது, அவரே தனது செல்போனில் அதனைப் படம் பிடித்துள்ளார்.

அவரை மர்ம நபர்கள் துரத்தியதால் தப்பிக்க வாய்க்காலில் குதித்து தப்பியதாக போலிஸாரிடம் அவர் கூறினார். இதனையடுத்து விரைந்து சென்ற போலிஸார் ராஜகுருவை சந்தித்தபோது, அவரது ஆடைகள் நீரில் நினையாமல் இருந்ததைக் கவனித்துள்ளனர்.

மேலும் ஓடிச் சென்று வாய்க்காலில் குதித்து தப்பியதற்கான எந்த அடையாளமும் அவரிடமும் சம்பந்தப்பட்ட இடத்திலும் இல்லை. அதேபோல், ஓடும் வேகத்தில் காலணியை தாறுமாறாக சுழற்றிவிட்டுச் சென்றதாகக் கூறினார். ஆனால் அவரது காலணிகள் அங்கு ஒரே இடத்தில் தான் கழட்டி வைக்கப்பட்டதுபோல் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்து அவரது செல்போனை வாங்கி சோதனை செய்தபோது, இரு சக்கர வாகனம் எரிந்து கொண்டிருப்பதை 20 நிமிடங்களுக்கு மேல் படம் பிடித்து வீடியோவாக எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் மீது கூகலூர் வி.ஏ.ஒ வெங்கடாசலத்திடம் இருந்து புகார் பெற்று ராஜகுரு மீது வழக்குப் பதிவு செய்து கோபி போலிஸார் கைது செய்தனர். தன்னை தீவிரவாதிகள் கொல்ல சதி என சொந்த வாகனத்தை எரித்து நாடகமாடிய ராஜகுருவின் செயலை கண்டுஅப்பகுதி மக்கள்சிரித்துள்ளனர்.

---------------------------------------------------------------------

எந்த விதிப்படி...

இப்படி........

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரியங்கா தாக்கல் செய்த மனுவில், தன்னுடைய கணவருக்கு அறிகுறியே இல்லாத கொரொனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் தங்களிடம் எங்கு சிகிச்சை பெறுகிறீர்கள் என்று ஒப்புதல் கூட கேட்காமல் தன்னுடைய கணவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக வலுக்கட்டாயமாக மையத்திற்கு அழைத்து சென்றனர்.

அவர்கள் அழைத்து சென்ற கொரொனா சிகிச்சை மையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை எனவும், தனிமனித இடைவெளியும் பின்பற்றவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தன் கணவரை மையத்திற்கு அழைத்து சென்ற பின் தன் வீட்டை தகரம் வைத்து அடைத்தாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அறிகுறி இல்லாத மற்றும் குறைவான அறிகுறியுடன் கொரொனா பாதிப்பு உள்ளவர்களை கொரொனா மையத்தில்தான் சிகிச்சை பெற வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, கொரொனா பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் அந்த பகுதியில் தகரம் அடிக்கபடுவதன் காரணம் என்ன?

என்ன விதியின் அடிப்படையில் தகரம் அடிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசு மற்றும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

-------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?