இலவங்கம்

இலவங்கம் சமஸ்கிருதம் - த்வாக், ஆங்கிலம் - Cinnamom Bark. தெலுங்கு - லவங்கப்பட்டி, ஹிந்தி - தால்சினி, கன்னடம் - லவங்கப்பட்டி, மலையாளம் - லவங்கப்பட்டா. கிராம்பு எனப்படும் இலவங்கம் வாந்தியை நிறுத்தக் கூடிய அல்லது தடுக்கக் கூடிய தன்மையுடையது. உள் உறுப்புக்களைத் தூண்டக் கூடியது, வயிற்றில் சேர்ந்து துன்புறுத்தும் வாயுவைக் கலைத்து வெளியேற்றக் கூடியது, வயிற்றில் ஏற்படும் கோளாறுகளைப் போக்க கூடியது, பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டக் கூடியது, வயிற்றில் அமிலச் சுரப்பால் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க கூடியது, வயிற்றுக் கடுப்பைப் போக்கக் கூடியது, நுண் கிருமிகளை அழிக்கக் கூடியது, தொற்று நோய்க் கிருமிகளைத் தோற்கடிக்க வல்லது, சோர்வை போக்கி புத்துணர்வை தூண்டக் கூடியது இலவங்க தைலம் வலிகுறைப்பானாக மேற்பூச்சாக பயன் படுத்தக்கூடியது. வாய் மற்றும் தொண்டைப் பகுதியின் மென்சதைப் பகுதியில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதற்கும் இலவங்கம் பயன்படுகிறது. பல்வலி ஏற்பட்ட போது இலங்கதைலத்தைப் பஞ்சில் நனைத்து மேலே சிறிது நேரம் வைத்திருப்பதால் ஒரு வலி மறுப...