அன்றைய செய்தி இன்றைய வரலாறு

நேற்றைய செய்தி இன்றைக்கு வரலாறு. வரலாறு கேட்கக் கதை போல் இருந்தாலும் அதை அனுபவித்தவர்கள் துன்பங்கள் தழும்புகளாக மாறுவதுடன் அவர்களை இந்த உலகை புரிய வைத்து பக்குவவப்படுத்தி விடுகிறது. அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாதது நமது தவறுதான். இயற்கையும் காலமும் நமக்கு நாளத்தூரும் பாடங்களை நடத்தி நமக்கு பகுத்தறிவை தந்து பக்குவப்படுத்தி வைக்கத்தான் செய்கிறது. கடந்த கால அனுபவங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடம் படித்ததே இல்லை. அவர் எம்.ஜி.ஆருடன் ,கலைஞருடன் அரசியல் செய்தும் இருவரின் பெருந்தன்மையை அவர் கொஞ்சமாவது கற்றுக்கொண்டதில்லை. அதிகாரம் இருக்கிறது என்பதால் காரணமே இல்லாமல் நள்ளிரவில் கலைஞரை வீட்டை உடைத்து,அவரை அடித்து உதைத்து இழுத்து கைது செய்தார். ஆனால் அவர் மீது குற்றம் சாட்ட காரணம் இல்லாததால் நீதிமன்றம் விடுவித்தது. ஆனாலும் ஜெயலலிதா கடைசிவரை ஆணவத்தின் உச்சமாகத்தான் இருந்தார்.அதனாலே அழிந்தரர். எப்படி இறந்தோம் ,என்று இறந்தோம்,என்பதையே அறியா இழி மரணம். ஆனால் அவர் அழிக்க நினைத்த கலைஞரோ ஜெயலலிதா மரணத்துக்கும் அஞ்சலி செலுத்த...