ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

பலவீனம் தான் பலம்....,!


ஜப்பானில் 15 வயது மாணவன் ஒருவனுக்கு ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு.

ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. 
கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். பல மாஸ்டர்களிடம் போனான். 
எல்லோரும் அவனை பரிதாபமாய் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார். 
பயிற்சி ஆரம்பமானது.

குரு ஒரேயொரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள் ஓடின. 

குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை.
 “குருவே.. ஜூடோ சாம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான். 
“இந்த ஒரேயொரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் குரு. மாணவன் பயிற்சியைத் தொடர்ந்தான்.

சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது. 

முதல் போட்டி. 
சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. 
ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்த மாணவன். போட்டி ஆரம்பமானது. 
எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக மாணவன் வெற்றி பெற்றான். 
இரண்டாவது போட்டி. 
அதிலும் அவனுக்கே வெற்றி. 
அப்படியே முன்னேறி இறுதிப் போட்டி வரை வந்தான். 
எதிரே இருப்பவன் பலமுறை சாம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். மாணவன் சளைக்கவில்லை. 
போட்டி ஆரம்பமானது.

முதல் சுற்றில் எதிர் வீரர் மாணவனை அடித்து வீழ்த்தினார். 

மாணவனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. '
போட்டியை நிறுத்திவிடலாமா' என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள். 
“வேண்டாம், மாணவன் சண்டையிடட்டும்” என்கிறார் குரு.
இவனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான். 

மாணவன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான்.
 எதிராளி வீழ்ந்தான். 
மாணவன் சாம்பியன் ஆனான். 
பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். 
அந்த மாணவனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை.
அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான். 

“குருவே. நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன் ? 
ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே“ என்றான்.

புன்னகைத்தபடி குரு சொன்னார், 

“உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். 
ஒன்று ஜூடோவிலுள்ள மிக வலிமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய். 
இரண்டாவது, இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். 
உனக்குத் தான் இடது கை கிடையாதே.

உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது..”

========================================================================
அல்சைமேர்ஸ் டிசீஸ் என்ற ஞாபக மறதி நோய் சுருக்கமாக, 'ஏடி' என்று மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது. 
முதுமையின் ஆரம்பத்தில் உள்ள சிலர், இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். 
இவர்கள் சிறு குழந்தை போல செயல்படுவதுடன், எந்த செயலிலும் ஈடுபட முடியாமல் இருப்பர். 
உலகின் மிக பிரபலமான பலர், இந்நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
மத்திய முன்னாள் அமைச்சரும், தொழிற்சங்க தலைவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்றும் உலகில் என்ன நடக்கிறது என்று அறியாமல் வாழ்கிறார். 
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரீகன், முன்னாள் இங்கிலாந்து பிரதமர் ஹரால்டு வில்சன், டென் கமான்மெண்ட்ஸ் என்ற ஆங்கில படத்தில் நடித்த சால்ட்டன் ஹெஸ்டன், ஐரீஷ் எழுத்தாளர் முர்டோர் ஐரீஷ் போன்ற பிரபலங்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். 
இந்நோயை குணமாக்கும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், உலகில் பல நாடுகளிலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 
ஆனால், இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.


                          தப்பே இல்லை.  மாவட்ட ஆட்சியர்கள்தானே இப்போ அதிமுக  மாவட்டச்செயலர் பொறுப்பு?