15000 கோடி வீட்டை காலி செய்ய
முகேஷ் அம்பானிக்கு நெருக்கடி!
ஒன்றியஅரசு சமீபத்தில் வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்தது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.
அதற்கு ஜனாதிபதியும் உடனே ஒப்புதல் கொடுத்துள்ளார்.
வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம்
மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக முஸ்லிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால் மசூதிகள் இருக்கும் இடத்தை பிடுங்கமாட்டோம் என்று மத்திய அரசு கூறிக்கொண்டிருக்கிறது.
நாட்டில் அதிகமான மற்றும் முக்கியமான கட்டிடங்கள் இருக்கும் நிலங்கள் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக இருக்கிறது.
கடும் விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம்! - அடுத்து என்ன?
அந்த நிலம் பல்வேறு காலக்கட்டங்களில் பலரின் கைகளுக்கு மாறி இருக்கிறது.
அந்த வகையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி தென்மும்பையில் கட்டி இருக்கும் பல அடுக்கு சொகுசு மாளிகையான ஆன்டிலியா கட்டிடம் இருக்கும் நிலமும் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது.
இந்தியாவிலேயே மிகவும் பணக்கார வீடாக பார்க்கப்படும் முகேஷ் அம்பானியின் வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.15000 கோடியாகும்.
இந்த வீடு இருக்கும் நிலத்தை முகேஷ் அம்பானி 2002-ம் ஆண்டு ரூ.21 கோடிக்கு வாங்கினார். அதுவும் வஃக்பு வாரியத்திடமிருந்து 4.5 லட்சம் சதுர அடி நிலத்தை வாங்கி அந்த நிலத்தில்தான் அம்பானி தனது கனவு இல்லத்தை கட்டி இருக்கிறார்.
வக்ஃபு வாரிய திருத்த மசோதா: பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தரப்பிலும் எதிர்ப்பு... நடப்பது என்ன?!
ஆனால் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலத்தை அம்பானிக்கு விற்பனை செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், வஃக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை தனிப்பட்ட தேவைகளுக்காக விற்பனை செய்ய முடியாது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அம்பானி - நீடா அம்பானி
அம்பானியின் வீடு இருக்கும் நிலம் முன்பு கரீம் பாய் இப்ராகிம் என்பவருக்கு சொந்தமானதாக இருந்தது.
கரீம் பாய் இப்ராகிம் தனது நிலத்தை வஃக்பு வாரியத்திடம் தானமாக கொடுத்தபோது ஆன்மீக கல்வி மற்றும் அனாதை இல்லம் கட்டுவதற்காக பயன்படுத்தவேண்டும் என்று சொல்லித்தான் கொடுத்தார்.
ஆனால் இப்போது அந்த நிலம் முகேஷ் அம்பானியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தை அம்பானியிடம் கொடுத்தபோது வஃக்பு வாரியத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு கொடுத்த பிறகுதான் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் அந்த நிலத்தை விற்பனை செய்வது தொடர்பாக முடிவு செய்ய வஃக்பு வாரியத்தின் கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலத்தை முகேஷ் அம்பானிக்கு விற்பனை செய்ய மும்பை சாரிட்டி கமிஷனர் ஒப்புதல் வழங்கி இருந்தார். அந்த ஒப்புதலை எதிர்த்தும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு முகேஷ் அம்பானிக்கு எதிராக திரும்பும் பட்சத்தில் முகேஷ் அம்பானி தனது வீட்டை காலி செய்துவிட்டு அதனை வஃக்பு வாரியத்திடம் ஒப்படைக்கவேண்டிய நிலை ஏற்படலாம்.
சுப்ரீம் கோர்ட்
வஃக்பு வாரிய சீர்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருப்பதால் முகேஷ் அம்பானிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்தி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. நெட்டிசன்கள் முகேஷ் அம்பானி வீடு இருக்கும் நிலம் யார் பெயரில் இருக்கிறது என்று ஆன்லைனில் சோதித்து பார்த்தபோது அந்த நிலம் 2002ம் ஆண்டு அனாதை ஆசிரமத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலும், முகேஷ் அம்பானியின் வீடு இருக்கும் வஃக்புவாரிய நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டி இருந்தார்.
வஃக்பு வாரியத்திடம் 1950-ம் ஆண்டு 52 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தது.
2025-ம் ஆண்டு இது 9.4 லட்சம் ஏக்கராக அதிகரித்தது.வக்பு வாரிய முறைகேடுகள் கண்டறியப் பட்டதே இதற்கு காரணம்