"அனைத்தையும் காணோம்?"
நிலக்கரி ஊழல் முக்கியக் கோப்புகள் அனைத்தையும் காணோம்! கோப்புகளுக்கு பதிலாக மீண்டும் பட்டிய ல்? ரூ1.86 லட்சம் கோடி அளவிற்கு மக்கள் பணம் சூறையாடப்பட் டுள்ள நிலக்கரிப் படுகை ஊழல் விவகாரத்தில் பெரும் நிறுவனங்க ளின் மின் திட்டங்கள் தொடர் பான கோப்புகளும் மாயமாகியுள் ளன. ரிலையன்ஸ்பவர், டாடா ஸ்பான்ஜ்அண்ட் அயர்ன், ரதி ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் ஆகிவற்றிற்கான நிலக்கரி ஒதுக்கீடு குறித்த கோப்புகள் மாயமாகி இருப்பதால் மீண்டும் ஒரு பெரும் சர்ச்சையில் காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசு சிக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நிலக் கரிப் படுகைகள் தனியார் கம்பெனி களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டின் போது ரூ1.86 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ள தாக குற்றச்சாட்டு எழுந்தது. நாட்டின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி) நாடாளுமன்றத்தில் சமர்ப் பித்த அறிக்கையில் அரசுக்கு ஏற் பட்ட இந்த இழப்பு விவரம் குறிப் பிடப்பட்டிருந்தது. இந்த மெகா ஊழல் நடந்த போது, நிலக்கரித் துறை, பிரதமர் மன்மோகன் சிங் வசம் இர...