வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

சாக்லெட் -பொய்கள்....!

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்ற சாக்லெட் சம்பந்தமாக மேற்குலகில் சில பொய்யான கற்பிதங்கள் உள்ளன.

நம்மில் பலர் தப்பென்று தெரிந்தும் தேடும் சுகம் சாக்லெட். சொல்லும்போதே வாயில் நீர் சுரக்கிறது இல்லையா? சாக்லெட் எல்லாம் சாப்பிடக்கூடாது வேண்டும் என்று டாக்டர் அறிவுறுத்தியிருந்தாலும், அது கண்ணில் பட்டால் பலருக்கு தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வது கஷ்டம். அதன் சுவைக்காகவும் இனிப்புக்காகவும் நமது நாக்கு எப்போதும் அதை நாடும். ருசிகண்ட ஆட்களை ஏங்க வைக்கும் குணம் அதற்கு உள்ளது.

சாக்லெட்டில் அனந்தமைட் என்ற ஒரு ரசியானம் இருக்கிறது. 
கஞ்சா புகைக்கும்போது உடலுக்குள் சேருகின்ற ரசாயனங்களைப் போன்றதாம் இது.
கொஞ்சமான அளவில் நாம் சாக்லெட் சாப்பிடும்போது, நம்மை ஆசுவாசப்படுத்துகின்ற ஒரு உணர்வை அது தருவதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
சாக்லெட் சம்பந்தமாக பல பொய்யான கற்பிதங்கள் நூற்றாண்டு காலமாகவே இருந்துவருகின்றன.
suran
சாக்லெட் சாப்பிட்டால் பாலுணர்வு தூண்டப்படும் என்றெல்லாம்கூட மேற்குலகில் சிலர் கருதுகின்றனர்.
பால் கலக்காத சாக்லெட்டை விட பால் கலந்த சாக்லெட்டில் கலோரி அதிகம் என பலருக்கு உள்ள புரிதல். இது உண்மையல்ல. பால் கலந்தது என்றாலும் சரி, பால் கலக்காதது என்றாலும் சரி, அவற்றில் கிட்டத்தட்ட ஒரே அளவான கேலரிகள்தான் உள்ளன. நூறு கிராம் சாக்லெட்டில் சுமார் 550 கேலரிகள் இருக்கின்றன.
தவிர சாக்லெட் சாப்பிட்டால் பருக்கள் வரும் என்றும் சிலர் சொல்வார்கள். ஆனால் அறிவியல் ரீதியில் அப்படி எதுவுமே நிரூபிக்கப்பட்டதில்லை.
சாக்லெட் சாப்பிட்டால் மைகிரெய்ன் தலைவலி வரும் என்று பலர் கருதுகின்றனர். சாக்லெட்டில் டைரமைன், ஃபீனைல்எதிலமைன் போன்ற அமினோ ஆசிட்கள் இருக்கின்றன. இவற்றால் மைக்ரெய்ன் தலைவலி தூண்டப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் சாக்லெட்டால் உட்கொள்வதால் மட்டும் ஒருவருக்கு மைக்ரெய்ன் வரும் என்று சொல்வதற்கு இல்லை.
சாக்லெட் சாப்பிடுவதால் சதைபோடும் என்றும் பலரும் நம்புகின்றனர்.
 சாப்பாட்டை வெளுத்துக் கட்டி விட்டு அதற்கும் மேல் சாக்லெட்டும் உட்கொண்டால் நிச்சயம் உடல் பெருக்கத்தான் செய்யும். ஆனால் ஆரோக்கியமான, அளவான சாப்பாட்டின் அங்கமாக கொஞ்சம் சாக்லெட் சாப்பிடுகிறோம், தவிர ஒரு நாளைக்கு முப்பது நிமிடம் என வாரத்தில் ஐந்து தடவை உடற்பயிற்சி செய்கிறோம் என்றால் சாக்லெட் சாப்பிடுவதால் உடல் பருமன் ஆக மாட்டோம்.

சாக்லெட்டை அளவாக எடுத்துக்கொள்ளும்போது அதனால் உடல் நலத்துக்கு சில நன்மைகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அன்டிஆக்ஸிடண்ட்ஸ் என்று சொல்லப்படுகின்ற இருதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் இரசாயனம் சாக்லெட்டில் உள்ளது.

சாக்லெட் சாப்பிட்டால் மனோநிலை ஆரோக்கியமாகும்
 - மூடு மேம்படும் -

 என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை

நரம்பியல் விஞ்ஞானிகள் கண்ணில் படவில்லை.-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 உ.பி. பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சஸ்பெண்ட் உண்மை?
--------------------------------------------------------------------------------------------

செய்யப்பட்ட விவகாரத்தில், ஆளும் கட்சி பிரமுகரின் தலையீடு இருந்துள்ளது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
இவர் பேசிய வீடியோ காட்சிகள் அம்பலமாகியுள்ளன.
உ.பி.,யில் ஆளும் சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது.முதல்வராக அகிலேஷ் யாதவ் உள்ளார். இம்மாநிலத்தின் கவுதம் புத்தா நகர் மாவட்ட, துணை கலெக்டராக இருந்தவர், துர்கா சக்தி நாக்பால். ஐ.ஏ.எஸ்., பெண் அதிகாரியான இவர், பொது இடங்களில், கட்டப்பட்ட பல கட்டடங்களை, இடிக்க உத்தரவிட்டார்.
suran
 மேலும், அப்பகுதியில், மணல் கொள்ளையில் ஈடுபட்ட, ஆளும் சமாஜ்வாதி பிரமுகர் மீது, நடவடிக்கை எடுத்தார்.
இதையடுத்து, ஆளும் கட்சி தரப்பில், பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், அதிகாரி துர்கா, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசின் இந்த நடவடிக்கைக்கு, எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து, கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இது குறித்து, மத்திய அரசு பணியாளர் நலத்துறை இணையமைச்சர் நாராயணசாமியை சந்தித்து, அகில இந்திய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சங்க பிரதிநிதிகள், பேச்சுவார்த்தை நடத்தினர். "துர்கா நாக்பாலின் சஸ்பெண்ட் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்' என, கோரிக்கை வைத்தனர்.
நேற்று பெண் ஐ.ஏ.எஸ்.,அதிகாரி துர்கா சக்தி விவகாரத்தில் சஸ்பெண்ட் சரியான நடவடிக்கைதான் என முதல்வர் அகிலேஷ் நியாயப்படுத்தி பேட்டியளித்தார்.
 இந்த சூழ்நிலையில் துர்கா சக்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டதன் பின்னணியில், ஆளும் கட்சி பிரமுகரான நரேந்தி பஹாதி என்பவருக்கு தொடர்பிருந்தது தெரிய வந்துள்ளது. இவர் மீது துர்கா சக்தி நடவடிக்கை எடுத்தார்.

இன்று வீடியோ ‌காட்சியினை டி.வி.சானல்கள் வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளன.
அதில் பேசிய நரேந்திர பஹாதி
" பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி, துர்காசக்தி மணல் குவாரிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து கட்சியின் தலைவர் முலாயம்சிங்கிடம் பேசினேன்.
காலை 10.30 மணிக்கு அவரை உடனே பதவியில் இருந்து தூக்கியடிக்க வேண்டும் என பேசினேன்.
அடுத்த 41 நிமிடத்தில் அவரை சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டது.
 இதில் இருந்து எனது செல்வாக்கினை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் "
என்று பேசியதாக அந்த வீடியோ காட்சி இடம் பெற்றுள்ளது.
இவரது பேச்சின் மூலம், வழிபாட்டு தல சுவரை இடித்ததால், நல்லிணக்க பாதிக்காமல் இருக்கவே சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என அகிலேஷ் கூறியது பொய் என்பதும், நேர்மையாக செயல்பட்ட அதிகாரியை, ஆளும் கட்சிக்கு வேண்டியவர் ‌சொன்னதால் சஸ்பெண்ட் செய்த உண்மையும் அம்பலமாகியுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
தற்கொலையை நோக்கித் தள்ளும் 
தாராளமயக் கொள்கைகள்!

1991ம் ஆண்டு, "நாடு கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வெளிநாட்டு கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை" என்று சொ ல்லித்தான் புதிய பொரு ளாதாரக் கொள்கையை ஆட்சியாளர்கள் அமல் படுத்தினர். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் அந்த கொள் கைகள் பின்பற்றப்படும் நிலையில், 20 ஆண்டுகளுக் குப் பிறகு இப்போதும் அதே நெருக்கடி நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
 1991ம் ஆண்டு பாடிய அதே பாட்டைத்தான் இப்போ தும் மத்திய ஆட்சியாளர்கள் பாடிக் கொண்டிருக்கின் றனர். உற்பத்தி செய்த சரக் குகளை ஏற்றுமதி செய்வ தன் மூலம் நம் நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்தை விட பொருட்களை இறக் குமதி செய்யும் செலவு அதி கமாக இருக்கிறது. அந்நியச் செலாவணி இருப்பு குறைந் துள்ளது. நிதி நெருக்கடியும் கடுமையடைந்திருக்கிறது. இந்தகாரணங்களால்தான் நமக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.இதனால் நாட்டின் வரவு செலவு இடிக்கிறது.
suran
 வளர்ச்சிப் பணிகளுக்குக் காசில்லை என்று அரசு கையை விரிக்கிறது. இந்த பற்றாக்குறை என்பது நம் நாட்டு மொத்த உற்பத்தியில்4.8சதவிகிதமாகவரலாறு காணாத அளவுக்கு உயர்ந் திருக்கிறது. பற்றாக்குறை யின் உண்மையான அளவு நம் மொத்த உற்பத்தியில் 11.8 சதவிகிதமாகும்.ஆனால்வெளி நாட்டிற்குச்சென்று கடுமையாக உழைத்து சம்பாதிக்கும் நம் உழைப்பாளர்கள் இந்தியா விற்கு பணம்அனுப்புவதால் தான் இந்த பற்றாக்குறை 4.8 சதவிகிதமாக உள்ளது.இந்தி யாவிற்கு அந்நியச் செல வாணி கொடுக்கக்கூடிய நம் நாட்டு உழைப்பாளிகளுக்கு மத்திய அரசு எந்த விருதும் தருவதில்லை.
ஆனால் ஒரு பைசா கூட அந்நியச் செலா வணி தராத, பெப்ஸி நிறு வனத்தின் தலைமை அதிகா ரியாக பணியாற்றும் இந் திரா நூயிக்கு மத்திய அரசு விருது வழங்குகிறது.பற்றாக்குறையை சமாளிக்க அந்நிய நேரடி முதலீட்டை வரவேற்கிறது அரசு.
ஆனால் பல்வேறு வரியினங்கள் மூலம் இந்நாட்டின் பெரும் பணக்கார நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.5 லட்சத்து 22 ஆயிரம் கோடி யை வசூலிக்காமல் கடந்த பட்ஜெட்டில் சலுகையாக அவர்களுக்கு வழங்கிவிட் டனர். அதேசமயம் பொதுத் துறை நிறுவனங்களை விற் பனை செய்து பணம் பெறு வதற்கு முயற்சிக்கின்றனர். எப்போது பார்த்தாலும், நம் நாட்டின் வளர்ச்சி விகிதத் தை அதிகரிக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர்.
 2012 - 13ல் 8.5 சதவிகிதமாக ஜிடிபி உயரும் என்று ஆரம்பத்தில் சொன்னார்கள்,ஆனால் அது படிப்படியாகத் தேய் ந்து 5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை யைச் சமாளிக்க எப்பாடு பட்டாவது அந்நியச் செலாவணியை அதிகரிக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறது. வெளிநாட்டுக் கம்பெனிகளின் காலில் விழுந்தாவது, பட்டுக்கம்பளம் விரித்து நம் ஊருக்கு வரச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்நிய நேரடி மூலதனம் நம் நாட்டுப் பங்குச் சந்தைக்கு வர வேண்டும் என்று கண் மூடித்தனமாக ஆட்சியா ளர்கள் செயல்படுகின்றனர்.
அப்படி வரும் வெளிநாட் டுப் பணம் நம் உற்பத்தித் துறையில் ஈடுபடப் போவ தில்லை. லாபம் ஈட்டுவதை மட்டுமே குறியாகக் கொ ண்ட அந்நிய நேரடி மூல தனம் பங்கு சந்தையில் லாபம் கிடைத்தால் இருக் கும், இல்லாவிட்டால் வெளியேறிவிடும். இதனால் நாட்டுக்கு எந்த நன்மையும் கிடையாது.
உள்நாட்டுச் சந்தையை பலப்படுத்தி விவசாயம், தொழில் ஆகியவற்றுக்கு ஊக்கம் கொடுத்தால் நம் பொருளாதாரம் ஆரோக்கியமாக வளரும். ஆனால் ஆட்சியாளர்கள் முழுக்க முழுக்க அந்நிய நேரடி மூலதனத்தை இங்கு வரவைப்பதை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படுகின்றனர். விவசாயத்திற்கோ, தொழிலுக்கோ எந்த உதவியும் செய்வதில்லை. தாராளமயம் என்பது ஒரு நல்ல சொல். தா ராள மனம் என்பதைக் குறிக்கும்.
ஆனால் தாராளமயக் கொள்கை என்பது அப்படியல்ல, அதை "நெறி முறை நீக்கம்" என்று சொல் வதே பொருத்தமாக இருக்கும்.இதனால் தான் நாட்டில் விவசாயிகள் தற்கொ லை செய்யும் நிலை ஏற்பட் டுள்ளது. ஏற்றுமதியாளர் களுக்கும் அரசு எந்த உதவி யும் செய்வதில்லை. அவர் களையும் தற்கொலையை நோக்கித் தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் யாரும் அத்தகைய முடிவுக் குப் போகக்கூடாது, ஆட் சியாளர்களின் கொள்கை களை மாற்றுவதற்குப் போ ராட வேண்டும்.
திருப்பூரைப் பொறுத்தவரை பின்னலாடை ஏற்றுமதி ஒன்றை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது. பன்முகமான தொழில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் திருப்பூரைப் பாதுகாக்க வேண்டும்.
                                                                                                        --டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா ------------------------------------------------------------------------------------------------------------------------------------


suran