அமெரிக்க உளவு
அமெரிக்க உளவுத்துறையினர் உலகின் முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்களுக்குள் நுழைந்து உளவுபார்ப்பதாக அமெரிக்க நாளிதழான த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் பிரிட்டிஷ் நாளிதழதான த கார்டியன் பத்திரிகையும் தெரிவித்துள்ளன. தனிநபர்களை இலக்குவைத்து மைக்ரோசாஃப்ட், யாஹு, கூகுள் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட 9 முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்கள் இவ்வாறு உளவுபார்க்கப்படுவதாக அந்தப் பத்திரிகைகள் கூறியுள்ளன. சில நபர்களின் நடமாட்டங்களைப் பின்தொடர்வதற்காக தனிப்பட்ட ஆட்களின் வீடியோ பதிவுகள், ஃபோட்டோக்கள், இ-மெயில்கள் போன்றன திரட்டப்படுவதாக அந்தப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டுகின்றன. PRISM (பிரிஸ்ம்) என்பதே அரசாங்கத்தின் இந்த ரகசிய உளவுத் திட்டத்தின் பெயர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளாக இந்த உளவுவேலை நடந்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமது சர்வர்களுக்குள் நேரடியாக நுழைவதற்கு அரசாங்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று ஃபேஸ்புக், ஆப்பிள் ஆகிய நிறுவன...