அமெரிக்க உளவு
அமெரிக்க உளவுத்துறையினர் உலகின் முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்களுக்குள் நுழைந்து உளவுபார்ப்பதாக அமெரிக்க நாளிதழான த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் பிரிட்டிஷ் நாளிதழதான த கார்டியன் பத்திரிகையும் தெரிவித்துள்ளன.
தனிநபர்களை இலக்குவைத்து மைக்ரோசாஃப்ட், யாஹு, கூகுள் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட 9 முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்கள் இவ்வாறு உளவுபார்க்கப்படுவதாக அந்தப் பத்திரிகைகள் கூறியுள்ளன.PRISM (பிரிஸ்ம்) என்பதே அரசாங்கத்தின் இந்த ரகசிய உளவுத் திட்டத்தின் பெயர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
6 ஆண்டுகளாக இந்த உளவுவேலை நடந்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமது சர்வர்களுக்குள் நேரடியாக நுழைவதற்கு அரசாங்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று ஃபேஸ்புக், ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் பதில் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகள் தொடர்பில் அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் ஜேம்ஸ் கிளப்பர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்த செய்திகளில் பல தவறுகள் காணப்படுவதாகவும், இப்படியான செய்திகள் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்பில் உளவுத்துறை நிறுவனங்களின் பணிகளை பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பா.ஜ.,வின் தேசிய செயற்குழு கூட்டம் கோவாவில் துவங்கியது. இந்த கூட்டத்தில் வரும் காலத்தில் தேர்தலை யார் தலைமையில் எதிர்கொள்வது என்பது மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. இதற்கான முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ள பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி வீட்டில் மோடி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதற்கிடையில ஜஸ்வந்த்சிங், யஸ்வந்த் சின்கா, சத்ருகன்சின்கா, ரவிசங்கர் பிரசாத், உமாபாரதி, உள்ளிட்டோர் இன்று கோவாவுக்கு வரவில்லை.
இவர் மோடி மீதான அதிருப்தியில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் அவர் உடல்நலம் தொடர்பாகத்தான் அத்வானி பங்கேற்கவில்லை என்று பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஜாவேத்கர் இன்று நிருபர்களிடம் பேசுகையில் கூறினார். பா.ஜ.,வில் பிளவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில் இன்று மோடி ஆதரவாளர்கள் மோடி படம் ஒட்டிய போஸ்டர்களுடன் அத்வானி வீட்டை முற்றுகையிட்டனர். இத்தொண்டர்கள் மோடிக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றவர்கள்" மோடி தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். எனவே அத்வானி ஒதுங்கி கெண்டு மோடியை முன்னிறுத்த ஒத்துழைக்க வேண்டும். இதற்காகத்தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம்." இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில் அத்வானியின் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் நாளையும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. உடல் நலம் குறித்து சுஷ்மா சுவராஜ் அத்வானியிடம் பேசினார். அத்வானி வீடு முற்றுகை தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் முழு அளவில் விளக்கம் கேட்டுள்ளதாகவும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 9 ஆண்டுகளாக பதவியில் இருந்த வரையில் இதுவரை வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.620 கோடி செலவிட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
2004ம் ஆண்டு முதன்முறையாக பிரதமர் பதவியை ஏற்றபோது முதல் பயணமாக 2004 ஜூலையில் பாங்காங் நாட்டிற்கு சென்றார்.
கடைசி பயணமாக 2013 ஏப்ரலில் ஜெர்மனி சென்றுள்ளார்.
இந்த கால கட்டத்திற்கிடையிலான 67 வெளிநாட்டு பயணங்களில் 64 பயணங்களுக்கான பில்கள் பிரதமரின் அலுவலகத்திற்கு வந்துள்ளன.
அவ்வகையில், இந்த பயணங்களுக்காக இதுவரை ரூ.620 கோடி செலவாகியுள்ளதாக பிரதமர் அலுவலக த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை மாதச் சம்பளம் ரூ.50 ஆயிரம்- தினப்படி ரூ.2 ஆயிரம- தொகுதிப்படி ரூ.45 ஆயிரம் என பிரதமரின் மொத்த மாதச் சம்பளம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------