வினோத் ராய்
ோபா செட், விளையாட்டு கிராமம், ஸ்டேடியப் பராமரிப்பு என காமன்வெல்த் போட்டியில் நடந்த ஊழல்களை புட்டுப் புட்டு வைத்தார் வினோத்ராய். விவகாரம் மீடியாவில் நாற, இந்திய விளையாட்டு சம்மளேனத் தலைவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார் சுரேஷ் கல்மாடி. நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு எந்த விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இல்லாமல் தாரை வார்த்த விதத்தில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சி.ஏ.ஜி. கிளப்பிய அதிரடி உச்ச நீதிமன்றம் வரை போனது. ஆவணங்களை பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கும், சட்டத்துறை அமைச்சர் அஸ்வனி குமார் ஆகியோருக்கு காட்டி திருத்தியதாக சர்ச்சை கிளம்பி, உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ.-க்கு கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு போனது. இப்படி அதிரடி கிளப்பிய வினோத்ராய் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். முன்பு தேர்தல் கமிஷனினில் டி.என். சேஷன் அதிரடி கிளம்பியபோது, அதை மூன்று பேர் கொண்ட அமைப்பாக மாற்றினார்கள். அதுப்போல சி.ஏ.ஜி.யும் மூன்று பேர் கொண்ட அமைப்பாக மாற்ற முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, காமன்வெல்த், விவசாயிகளுக்கு கடன் தள்ள...